சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகைகளுடன் ஜாலி: நகைக் கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலம்

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
திருச்சி: தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நானும், மாமாவும் ஜாலியா இருந்துள்ளோம். ஒரு தமிழ் ஹீரோயினுக்கு என் மாமா ஒரு நகையை தந்தார். அவங்களும் அதை வாங்கிக்கிட்டாங்க என போலீசில் கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலம் தந்துள்ளான். லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளை முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொள்ளையடித்தனர். கொள்ளை அடித்தது

திருச்சி: தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நானும், மாமாவும் ஜாலியா இருந்துள்ளோம். ஒரு தமிழ் ஹீரோயினுக்கு என் மாமா ஒரு நகையை தந்தார். அவங்களும் அதை வாங்கிக்கிட்டாங்க என போலீசில் கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலம் தந்துள்ளான். லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளை முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொள்ளையடித்தனர்.latest tamil newsகொள்ளை அடித்தது எப்படி ?
இதில், மொத்தம் 6 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை வாடிப்பட்டி போலீசார் திருச்சி வந்து சுரேஷிடம் விசாரித்தனர். நேற்று 3-ம் நாள் விசாரணையில் தன்னுடைய மாமா முருகன் எப்படியெல்லாம் கொள்ளை அடித்தார் என்பதை போலீசாரிடம் தெரிவித்தான். நேற்று முன்தினமே ஒரு தமிழ் இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு உள்ளது என்ற செய்தி பரவியது.
ஏற்கனவே எய்ட்ஸ் வந்த முருகன், எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்திருப்பார் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்தது. இப்போது, திரும்பவும் நடிகை சமாச்சாரத்தை பற்றி சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். அதில், நானும் என் மாமாவும், கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளோம் ஏற்கனவே 2 தெலுங்கு படங்கள் எடுத்து கையை சுட்டுக் கொண்டோம். ஷுட்டிங் முடிந்தும் படம் ரிலீஸ் ஆகாத ஆத்திரத்தில் இருந்தோம். இதனால்தான் பண நெருக்கடியை சரிக்கட்ட பஞ்சாப் நேஷனல் பேங்கில் கொள்ளையடித்தோம். அந்த பணத்தை வைத்து திரும்பவும் சினிமா எடுக்க பிளான் பண்ணினோம்.
இளம் தமிழ் நடிகை
அதற்காக நானும் என் மாமா முருகனும் தற்போது பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகையை நேரில் போய் பார்த்தோம். அந்த நடிகை முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் இந்த நடிகை நடித்துள்ளார். அவர் ஒரு வாரிசு நடிகை. நாங்கள் எடுக்க போகும் படத்தில் நீங்கதான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது, தற்போது தான் பிசியாக இருப்பதாகவும், கால்ஷீட் உடனே கிடைக்காதே என்றும் சொன்னார்.


latest tamil newsஅப்போது நாங்கள், சொந்தமாக ஒரு நகைக்கடையை வைத்துள்ளோம் என சொல்லி, ஒரு நகையை அந்த நடிகைக்கு கொடுத்தோம். அது ஏற்கனவே பேங்கில் கொள்ளையடித்த நகைதான். உடனே நடிகையும் அந்த நகையை வாங்கி கொண்டார். அந்த நடிகையிடம் விசாரணை நடத்தவும்,இதைதவிர கொள்ளையடித்த நகை, பணத்தை வேறு நடிகைகள் யாரிடமாவது முருகன் கொடுத்து வைத்திருக்கிறானா என்ற விசாரணையும் நடக்கிறது. முருகனுடன் உல்லாசமாக இருந்த, மற்றும் தொடர்பில் இருந்த தமிழ், தெலுங்கு நடிகைகள் எல்லாம் இப்போது பயத்துடன் இருக்கிறார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-அக்-201915:59:29 IST Report Abuse
Lion Drsekar மாணவர்களுக்கு பொது அறிவு என்று ஒரு பகுதி இருப்பது போல் நமக்கு இதுதான் பொது அறிவு பாடம், கற்றது மறக்காமல் இருக்கும் மூளையின் செல்களை ஊக்குவிக்க இது போன்ற செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நேற்றைய செய்தியில் இவர் காவல் விசாரணைக்கு செல்ல மறுத்தார் அவருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளித்து விளக்கு அளித்தது, தற்போது இவர் காவலர்களிடம் இந்த செய்தியைக் கூறுகிறார் என்ற செய்தி? பரவாயில்லை, ஏதோ ஒரு செய்தி வருகிறதே, அதிலும் ஒரு நடிகை என்று கூறியிருக்கிறார் இதற்காகவே அவர் யார் என்று அனைவரும் ஆவலோடு அந்த செய்திக்காக இருப்பார்கள் என்று தினம் ஒரு செய்தியாக வெளிவரும் போல் ?? ஏதோ பொழுது புலர்ந்தால் ஒவ்வொரு செய்தி,வாழ்க வளமுடன், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-அக்-201915:44:37 IST Report Abuse
Endrum Indian "தோல் காமி பணம் பண்ணு " தொழில் துறை தொழிலாளிகள் தானே அப்படித்தானிருப்பார்கள்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-அக்-201911:54:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவர்களால் எவ்ளோ நடிகைகள் எய்ட்ஸ் லே பாதிச்சு செத்தாங்களோ GOK
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X