மனை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

Added : அக் 17, 2019
Advertisement

புதுச்சேரி:மனை வாங்கித் தருவதாக, அரசு அதிகாரியிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன்; திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா, 47. இருவரும் வீடு அல்லது வீட்டு மனை வாங்க முடிவு செய்து, விசாரித்து வந்தனர்.அதே அலுவலகத்தில் எம்.டி.எஸ்., ஊழியராக பணியாற்றும் செல்வம், 45, புதுச்சேரி மோந்தரேஸ் வீதியில் வசிக்கும் பெரியசாமிக்கு, கிருஷ்ணா நகரில் காலிமனை இருப்பதாகவும் அதை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.மனையை, 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு பேசி, 02.05.2013ல் கிரைய அச்சார உடன்படிக்கை செய்தனர். அதற்கான கமிஷன் தொகையாக, 36,400 ரூபாயை, புரோக்கர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் செல்வம், அய்யனார், 46, ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.பெரியசாமியின் மகன் அகிலன், 42, கிரய பணத்தை தவணை முறையில் பெற்றுள்ளார்.

மனையை கிரையம் செய்ய பதிவு அலுவலகம் சென்ற போது, அந்த இடம் வேறு ஒருவர் பெயரில் இருப்பதும், பெரியசாமிக்கு பவர் கொடுத்த அனுசுயா, இறந்துபோனதும் தெரியவந்தது. இதனால், பத்திர பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.அதிர்ச்சியடைந்த அசோகன், ஜெயா ஆகியோர், வேறு இடம் அல்லது கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். பணத்தை தர மறுத்த அகிலன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்இது குறித்து ஜெயா கொடுத்த புகாரின்பேரில், அகிலன், புரோக்கர்கள் செல்வம், அய்யனார் உள்ளிட்ட 3 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X