தேசியவாதிகளுக்கு ஆபத்து!

Added : அக் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தேசியவாதிகளுக்கு ஆபத்து!

தேசியவாதிகளுக்கு ஆபத்து!
மேற்கு வங்க மாநிலத்தில், தேசிய சிந்தனை உடையவர்கள், தேச பக்தர்கள் எல்லாம் கொல்லப்படுவது துரதிர்ஷ்டவசமானது. கடந்த சில மாதங்களில் மட்டும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பலர், மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்டுள்ளனர்; இது, ஆபத்தான போக்கு. மன்மோகன் வைத்யாதுணை தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
பதில் சொல்லுங்களேன்!
காங்கிரஸ் கட்சியினர், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயற்சிக்கின்றனர். மனித உரிமைகள் மீறப்படுவதாக புகார் கூறுகின்றனர். காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, மனித உரிமைகள் பற்றி, இவர்கள் பேசாதது ஏன்? இதற்கு பதில் சொல்லுங்களேன், பார்க்கலாம். ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,
வறுமையை ஒழிப்போம்!
மேற்கு வங்கத்தில், வறுமையை முற்றிலும் ஒழிப்பதே, திரிணமுல் காங்கிரசின் நோக்கம். கல்வியறிவை அதிகரிப்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மனித உரிமையை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம், வறுமையை ஒழிப்போம். மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
18-அக்-201915:44:46 IST Report Abuse
JSS மேற்கு வங்கத்தில் வன்முறைகளை அதிகரிப்பது, தொழிற்சாலைகள் வரவிடாது தடுப்பது, வறுமையை அதிகரிப்பது ஆகியவையே திரிணாமுல் காங்கிரஸின் நோக்கம் என்பதை சொல்வதற்கு பதிலாக நேர்மறையாக சொல்லிவிட்டார் தீதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X