சிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் : 'பேசினார்' மன்மோகன் சிங்

Updated : அக் 19, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (58+ 89)
Advertisement
 சிறப்பு ,அந்தஸ்து ,ரத்தை, ஆதரிக்கிறோம்,'பேசினார்', மன்மோகன் சிங்

மும்பை,:''ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு பார்லியில் நாங்கள் ஆதரவு அளித்தோம். ஆனால், பா.ஜ., அரசு அடக்குமுறையை கொண்டு வருவதற்கு அல்ல,'' என, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிராவில், வரும், 21ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


நடவடிக்கை

இந்நிலையில், தலைநகர் மும்பையில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிருபர்களை நேற்று சந்தித்தார்.அப்போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது பிரிவு தற்காலிகமான நடவடிக்கை தான். அந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு, பார்லி.,யில் நாங்கள் ஆதரவு அளித்தோம். ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு நல்லது ஏற்படும் என்ற எண்ணத்தில் ஆதரவு அளித்தோம். ஆனால், அதற்காக அடக்குமுறையை கையாள்வதை நாங்கள் எதிர்க்கிறோம்.அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை, அரசியல் ரீதியில் பழிவாங்க மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.


வாய்ப்பு இல்லை


ஹிந்து மகாசபை தலைவராக இருந்த சாவர்கரை நாங்கள் எதிர்க்கவில்லை. காங்ரசின் இந்திரா, பிரதமராக இருந்தபோது, சாவர்கருக்கு தபால் தலை வெளியிட்டார். அதே நேரத்தில் சாவர்கரின் ஹிந்துத்துவா கொள்கையைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை, முஸ்லிம்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தினர்.

ஆனால், நீக்கப்பட்ட, 19 லட்சம் பேரில், 12 லட்சம் பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள். நாட்டுப்பற்று குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. பா.ஜ., அல்லது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவை அல்ல.

வரும், 2024ம் ஆண்டுக்குள், 350 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. தற்போதைய கணிப்புகளின்படி, இடைக்கால பொருளாதார வளர்ச்சி, 5.5 - 6 சதவீதமாக இருக்கும். ஆனால், அரசு நிர்ணயித்துள்ள இலக்கை அடைய 8 - 10 சதவீத வளர்ச்சி தேவை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (58+ 89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
24-அக்-201917:20:21 IST Report Abuse
madhavan rajan அடக்குமுறையை எதிர்க்கிறோம் என்று கூறும் இவர் இவருடைய ஆட்சிக்கு காலத்தில் அடக்குமுறையை இல்லாமல் 370 சலுகையை நீக்கியிருக்கலாமே? யார் தடுத்தது. இவர்கள் அதை பற்றியே சிந்திக்கவில்லை. நம்மால் முடியாது என்று இருந்தார்கள். அங்கு நடக்கும் கலவரங்களுக்கு அங்குள்ள முஸ்லீம் அமைப்புகளும் அதன் தலைவர்களும் காரணமில்லை அவர்கள் ஆதரவு இல்லையென்று இவரால் கூறமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
easwaran.s - tiruvallur,இந்தியா
24-அக்-201912:20:15 IST Report Abuse
easwaran.s பத்தாதுன்னு சொல்றவங்க அதுக்கு வழியை சொல்லலாமே
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-அக்-201919:23:50 IST Report Abuse
r.sundaram முன்னூற்றி ஏழுபதை நீக்கியதை காங்கிரஸ் ஆதரிக்கிறதம்மா? இதை சோனியாவிடம் கேட்டுவிட்டுத்தான் இவர் பேசுகிறாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X