பொது செய்தி

இந்தியா

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை

Added : அக் 17, 2019
Advertisement
 தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை

திருவனந்தபுரம், : 'ஆசிரியைகள் உள்பட, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்படும்' என, கேரளா அறிவித்துள்ளது.கேரளாவில், மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளோம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கும், 26 வார சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறை கிடைக்கும். அதைத் தவிர, பேறுகால சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். பேறுகால மருத்துவச் செலவுக்காக, பெண் ஊழியர்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்கள், 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா உள்ளது.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X