பொது செய்தி

இந்தியா

கரூர் வைஸ்யா வங்கிகளில் லோன் திருவிழா இன்று துவக்கம்

Added : அக் 17, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளைகளில், தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு டிஜிட்டல் லோன் திருவிழா இன்று 18ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது.
இம்முகாமில் அனைத்து விதமான கடன்களுக்கும் இலவச ஆலோசனை மற்றும் உடனடியாக அப்ரூவல் செய்யப்படுகிறது. புதிதாக வீடு கட்ட, வாங்க, குறைந்த வட்டியில் கடன் தரப்படுகிறது. மற்ற வங்கியில் இருந்து கடனை மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு. வீடு புனரமைத்தலுக்கும் கடன் தரப்படுகிறது.வீடு மற்றும் வீட்டுமனைகளின் பேரில் சொத்து அடமானக்கடன் பெற்றுக் கொள்ளலாம். கடனை பத்து ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தும் வசதி உண்டு. அத்துடன், வாகனத்தின் மொத்த விலையில் 90 சதவீதம் வாகன கடன் பெறலாம். குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை தனி நபர் கடனும் அளிக்கப்படுகிறது.முகாமில், 15 நிமிடங்களில், வாடிக்கையாளர்கள் பெறும் லோன் தொகையை இலவசமாக அறிந்து கொள்ளலாம். மிக குறைந்த புராசசிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கடன் பெற விரும்புவோர், 3 மாத வருமான சான்று, 3 ஆண்டு ஐ.டி.ஆர்., ஆதார் கார்டு, பான் கார்டு, ஓராண்டு வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து வர வேண்டும்.
கே.வி.பி., டிஜிட்டல் வணிக கடனை 50 லட்சம் வரை ஜி.எஸ்.டி., நெம்பர், ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் இருந்தால் பெற முடியும். உடனடியாக அப்ரூவல் தரப்படுகிறது. ஜி.எஸ்.டி., பதிவு எண், ஜி.எஸ்.டி., ரிட்டர்ன், ஆதார் கார்டு, பான்கார்டு, ஓராண்டு வங்கி ஸ்டேட்மென்ட் அவசியம் எடுத்து வர வேண்டும்.இத்துடன் தனிநபர் மற்றும் வியபாரிகளுக்கு நகை கடன் வசதி உண்டு. அனைத்து வேலைநாட்களிலும் நகை கடன் கொடுக்கப்படும். மிக குறைந்த நிமிடத்தில் நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு கொசக்கடை கிளை-98432-84832, லாஸ்பேட்டை கிளை-84899-10825, வில்லியனுார் கிளை-84899-10826, ரெட்டியார்பாளையம் கிளை-80981-04411, பிள்ளையார்குப்பம் கிளை-84899-10831 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X