பொது செய்தி

இந்தியா

கட்டடங்களின் மீது வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளுக்கு 'கிடுக்கிப்பிடி'

Added : அக் 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:கட்டடங்களின் மாடியில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பலகைகளை அகற்றுமாறு, பொதுப்பணி, உள்ளாட்சி ஆகிய துறைகளின் அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி முழுவதும் பேனர், கட் அவுட்கள் வைப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்றவும், கண்காணிக்கவும் அதிகாரிகளை கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் கட்டடங்களின் மீது பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பலகைகளுக்கும் அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இவற்றை அகற்றுவதற்கான உத்தரவை, கலெக்டர் அருண் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாகவும், எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிப்பதற்கான தயார் நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டம், கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், புதுச்சேரி பகுதி முழுவதும் கட்டடங்களின் மீதும், சாலையோரங்களிலும், போக்குவரத்து சிக்னல்களின் ஓரங்களிலும், தெரு முனைகளிலும் பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான முறையில் விளம்பர பலகைகள் (ஹோர்டிங்ஸ்) வைக்கப்பட்டுள்ளது கவனத்துக்கு வந்துள்ளது. மேலும், அரசிடம் இருந்து அனுமதி பெற்று வைத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.
அதுபோன்ற விளம்பர பலகைகள், வேகமாக காற்று வீசும்போதும், புயல் நேரங்களிலும் கீழே விழும் வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.எனவே, கட்டடங்களின் மீது வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் உட்பட ஆபத்தான முறையிலும், அனுமதி பெறாமலும் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை அகற்றப்படுவதை, பொதுப்பணித் துறையும், உள்ளாட்சித் துறையும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களும் உறுதி செய்ய வேண்டும்.இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
18-அக்-201917:06:47 IST Report Abuse
s.rajagopalan 'இது ரொம்ப அநியாயமுங்க ..... ...இப்படி எங்க வவுத்துலே அடிச்சா எப்படீங்க பொழைக்கிறது....என்று கேட்டால் ....'நான் என்ன செய்ய, இந்த அம்மா பேடி என்ன சொன்னாலும் என்னை கண்டுக்க மாட்டேன் என்கிறாரே' என்று நாராயணசாமி சொல்வாரோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X