பொது செய்தி

இந்தியா

குறைந்து வரும் பெரும் பணக்காரர்கள் ஆச்சரியமளிக்கும் ஆய்வறிக்கை தகவல்கள்

Updated : அக் 19, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (22)
Advertisement
 குறைந்து,வரும் ,பெரும், பணக்காரர்கள் ,ஆச்சரியமளிக்கும் ஆய்வறிக்கை, தகவல்கள்

மும்பை:நாட்டில், மிகப்பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, 'கார்வி வெல்த் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள மிகப்பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டில், 2.56 லட்சமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், இவர்களின் எண்ணிக்கை, 2.63 லட்சமாக இருந்தது என, கார்வி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.


அதிகரிப்புஇது குறித்து, அறிக்கையில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது.முதலீடு செய்யும் நிலையில், உபரி தொகையாக, 7 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்கள், மிகப்பெரும் பணக்காரர்களாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இவர்களின் எண்ணிக்கை, 2.56 லட்சமாக குறைந்து விட்டது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இந்த மிகப்பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 2.63 லட்சமாக அதிகரித்திருந்தது.

இருப்பினும், இந்த 2.63 லட்சம் மிகப்பெரும் பணக்காரர்களின் மதிப்பு, 2018ல், 430 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, 2017ல், 392 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த, 2018ல், இவர்களின் சொத்து வளர்ச்சி, 9.62 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே,
இதற்கு முந்தைய ஆண்டில், 13.45 சதவீதமாக அதிகரித்திருந்தது.


முதலீடுமேலும், மிகப் பெரும் பணக்காரர்களின், 262 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்கள் நிதி சொத்துக்களாகவும், மீதி பிற நிலம் மற்றும் பொருட்கள் போன்ற சொத்துக்களாகவும், 60:40 என்ற விகிதத்தில் உள்ளது.நிதி பிரிவில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் சொத்துக்களில் அதிகளவு, நேரடி பங்குகளில் செய்யப்பட்டுள்ளன. 52 லட்சம் கோடி ரூபாய், பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வளர்ச்சியை பொறுத்தவரை, 6.39 சதவீதமாக, 2018ல் உள்ளது. இதுவே, 2017ல், 30.32 சதவீதமாக அதிகரித்திருந்தது.

நிலையான வைப்புத் தொகை மற்றும் பத்திரங்களில், 45 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யபட்டு உள்ளது. இதன் வளர்ச்சி, 8.85 சதவீதமாகும். இதற்கு முந்தைய ஆண்டில் இப்பிரிவில் வளர்ச்சி, 4.86 சதவீதமாக இருந்தது.இதற்கடுத்து இன்சூரன்சில் அதிகளவு முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

வங்கி டெபாசிட்டுகளில், 34 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, 2018ல் செய்யப்பட்டுள்ளது. நிதிச் சந்தை முதலீடு களை தவிர்த்து, பிற வகையான முதலீடுகளில் முதலிடம் பிடித்திருப்பது, தங்கம் மீதான முதலீடுகள் தான். கிட்டத்தட்ட, 80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், மதிப்பீட்டு காலத்தில் தங்கத்தில் செய்யப்பட்டு உள்ளன.


வளர்ச்சிஅடுத்து, ரியல் எஸ்டேட் பிரிவில், 74 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு
உள்ளது. இருப்பினும், சொத்து மதிப்பு வளர்ச்சி, 7.13 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, 2017ல்,
10.35 சதவீதமாக அதிகரித்திருந்தது.நிதி சந்தையில், தனிநபர் சொத்து வளர்ச்சியானது,
நிதியாண்டு, 2024 வரை, ஒவ்வொரு ஆண்டும், 13.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டு, 798
லட்சம் கோடி ரூபாயாக பெருகும் என, கணிக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்க பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-201915:25:06 IST Report Abuse
ஆப்பு சத்தியமா இது நேரு செஞ்ச சதிதான்.2025 ல எல்லோரும் 15 லட்சாதிபதியாயிருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
18-அக்-201914:38:29 IST Report Abuse
Ashanmugam வளர்ந்து வரும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து பண முதலைகள் வீடுகளுக்கு பாரபட்சம் இன்றி சிபிஐ ரெய்டு மூலம் எப்படி கோடான கோடி சொத்துக்களை வந்த state of origin வழி முறை விவரங்களை சேகரித்து, தகாத வழியில் ஈட்டின சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவுக்கு சென்றால், இந்தியா வல்லரசு நாடுகளின் பண ஆதிகத்தை மிஞ்சி, உலகில் நெம்பர் 1 வல்லரசு நாடாக மாறிவிடும். அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள பண முதலைகள் உண்மையான வருமான வரி, சொத்து வரி, எஸ்டேட் வரி ஆகியவைகளை முறையாக கட்டாமல், ஆடிட்டருக்கு கோடி பணத்தை அள்ளி கொடுத்து, கவர்மெண்ட்டுக்கு பொய் கணக்கு வழக்கு சமர்பித்து, உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைத்து உள்ளனர். இதனால் இந்தியா வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களை வறுமை கோட்டுக்கு மேலே வரவழிக்க முடியாமல் வெளி நாட்டில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனை மோடிஜி அவர்கள் மன உறுதியுடனும், திடகார்த்த நெஞ்சுடனும் பாரபட்சம் இன்றி செயல் புரிவாரா என்பதை " அம்மா" பாணியில் பொருத்திருந்து பார்போம்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
18-அக்-201913:16:22 IST Report Abuse
Ramakrishnan Natesan ஆமாம் பணக்காரன் மிடில் கிளாஸ் போய் விட்டான் மிடில் கிளாஸ் EVS க்கு ( economically weaker section) க்கு போய் விட்டான் இது இன்றைய ஆட்சியின் சாதனை
Rate this:
Share this comment
18-அக்-201917:13:42 IST Report Abuse
நக்கல்மோடியை எதிர்ப்பவர்கள் யாரும் யோசிப்பதில்லை... இந்த செய்தி மாறி வந்திருந்தால், அதாவது பெரும் பணக்காரர்கள் அதிகமாகி விட்டார்கள் என்றிருந்தால், இதே எதிர்ப்பாளர்கள் அதானி, அம்பானின்னு குதிச்சிருப்பாங்க... பாவம் உங்களை போன்றவர்கள் நிலைமை.......
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
18-அக்-201918:23:34 IST Report Abuse
Rayஆளாளுக்கு கண்ட கண்டவனும் பணக்காரன்னா என்னய்யா அர்த்தம்? அதுக்கும் ஒரு தகுதி வேணாமா> அதான் பணக்காரங்க எண்ணிக்கையை குறைச்சிருக்காங்க CBI IT ET க்கு நல்லது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X