எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மதுரை வைகை ஆற்றின் ஆக்கிரமிப்புகள்.. அகற்றப்படுமா? ஆராய தனிக்குழு அமைக்குமாறு அறிவுறுத்தல்

Updated : அக் 18, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: 'மதுரை வைகை ஆற்றின் எல்லை நிர்ணயம் ஆக்கிரமிப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் தலைமையில் வருவாய் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் குழு ஆய்வு செய்து நவ. 12ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து 'மூல வைகை துவங்கி கடலில் கலக்கும் இடம் வரை உள்ள வைகையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என சமூக ஆர்வலர்கள்
மதுரை, வைகை, ஆறு,ஆக்கிரமிப்புகள்,அகற்றப்படுமா?

மதுரை: 'மதுரை வைகை ஆற்றின் எல்லை நிர்ணயம் ஆக்கிரமிப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் தலைமையில் வருவாய் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் குழு ஆய்வு செய்து நவ. 12ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து 'மூல வைகை துவங்கி கடலில் கலக்கும் இடம் வரை உள்ள வைகையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

'வையை எனும் பொய்யா குலக்கொடி' இன்று பொய்த்து விட்டது. இதர ஆறுகளில் எல்லாம் வெள்ளம் பாய தமிழகத்தின் நான்காவது பெரிய நதியான வைகை மட்டும் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் வறண்டே கிடக்கிறது.'இதற்கு காரணமாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக 'வைகை ஆறு உட்பட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நீர் நிலைகளை முறையாக பராமரித்து தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என 2018ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கலாகின.

அப்போது நீதிபதிகள் 'நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. பக்கத்து மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தும் நிலை உள்ளது. முதல் கட்டமாக மதுரை வண்டியூர், மாடக்குளம், செல்லுார், திருப்பரங்குன்றம் உட்பட சில கண்மாய்கள் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என்றனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையின்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தனர்.இந்நிலையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் 'உயர் நீதி மன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட நீர்நிலை மீட்புக்குழு ஆய்விற்கு சென்றது. சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில் நீர்நிலைகளின் எல்லைகளை எப்படி வரையறுக்க முடியும்?

'வைகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆரப்பாளையம் முதல் தெப்பக்குளம் வரை சாலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. வைகையின் நீளம் அகலம் எவ்வளவு என்பதை வரை யறுக்காமல் பணி மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.அரசுத் தரப்பில் 'வைகையின் எல்லையை வரையறுத்த பின்பே பணி துவங்கியுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.


நீதிபதிகள் உத்தரவு:


இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் நியமிக்கப்படுகிறார். அவரது தலைமையில் மதுரை கிழக்கு வடக்கு தெற்கு தாசில்தார்கள் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் குழு வைகையின் எல்லை நிர்ணயம் ஆக்கிரமிப்புகள் குறித்து அக். 19ல் ஆய்வு செய்ய வேண்டும். நவ. 12ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயத்தில் மதுரை நகரில் மட்டுமின்றி ஒட்டுமொத்த வைகை ஆற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.தேனி மாவட்டம் மேகமலை வருஷநாடு பகுதியில் ஆறு உற்பத்தியாகும் இடத்திலேயே ஆக்கிரமிப்புகள் துவங்கி விடுகின்றன. அங்கிருந்து ஆண்டிப்பட்டி வைகை அணை திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களை கடந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலை அடையும் இடம் வரை 258 கி.மீ. துாரமும் அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளன.

இரு கரைகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகள் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்னந்தோப்புகள் பல உள்ளன. மதுரை நகரை கடக்கும் 10 கி.மீ.யில் ஆற்றின் அகலம் வெகுவாக குறைந்து விட்டது.ஆற்றை ஆக்கிரமித்ததோடு கழிவுநீரை பாய்ச்சி அசுத்தப்படுத்துவதும் தொடர்கிறது. ஆற்றில் அத்துமீறும் பலரும் அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.

முந்தைய காலங்களில் இரு கரைகளை தொட்டபடி ஓடி மக்களின் தாகம் தணித்த வைகை பின் வானம் பார்த்து ஏங்கும் அவல கதிக்கு ஆளானதற்கு துவக்கம் முதல் இறுதி வரை ஆக்கிரமிப்பின் கரத்தில் சிக்கியதே காரணம்.எனவே 'ஆறு முழுவதையும் குழுவினர் பார்வையிட்டு அதன் நீள அகலத்தை வரையறை செய்து ஆக்கிரமிப்புகளை துடைத்தெறிய வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
18-அக்-201909:50:05 IST Report Abuse
GMM வைகை ஆற்றின் எல்லை நிர்ணயிக்க வேண்டும். எல்லைக்குள் இருப்பது அரசுக்கு சொந்தம். வீடு இருப்பின் ரேஷன், ஓட்டு பிறந்த இடத்தில்/சொந்த ஊரில் மட்டும். வாடகை வீட்டில் / தங்கும் விடுதி/ பட்டா இல்லாத இடங்களில் ஓட்டு போட வாக்காளர் பெயர் கூடாது. வீடு இல்லாதவருக்கு VAO அலுவலகத்தில் வாக்காளர்கள் பட்டியல். சென்னை கூவம் சீர் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X