பொது செய்தி

இந்தியா

சத்யா நாதெள்ளா சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி: 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, சத்யா நாதெள்ளா, 2019 நிதியாண்டில், 66 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு பெற்றுள்ளார்.


அடிப்படை சம்பளம், 7.1 கோடி ரூபாய் அதிகரிப்பு, பங்குகளின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக, 2019ம் நிதியாண்டில் நாதெள்ளாவின் வருமானம், 305 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 66 சதவீதம் அதிகமாகும். மைக்ரோசாப்டின் நிதி ஆண்டு ஜூலை 1ல் துவங்கி, ஜூன் 30ல் முடிவடையும் காலகட்டமாகும். 2014ம் நிதியாண்டில், அதிகபட்ச ஊதியமாக, 599 கோடி ரூபாயை நாதெள்ளா பெற்றுள்ளார்.

இது குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது :நிறுவன ஊழியர்களின் ஊதியம் சராசரி, 2019ம் நிதியாண்டில், 1.2 கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில், நிறுவன பங்குதாரர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. பங்குகளின் மறுகொள்முதல் மற்றும் ஈவுத் தொகை ஆகியவற்றின் மூலம், 2.19 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது. நாதெள்ளாவின் தலைமை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சிகள் நிறுவனத்தின் உயர்வுக்கு காரணமாக அமைந்தன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
23-அக்-201916:34:26 IST Report Abuse
Nathan பஜ கோவிந்தம் எனும் நீதிகே கவிதையில் ஒரு வரி, "மா குரு தன ஜன யவ்வன கர்வம், ஹரதி நிமேஷாத் கால சர்வம், மாயா மாயம் இதம் அகிலம் பூத்வா , பிரம்ம பதம் தவம் பிரவிச விதித்வா" - செல்வம் ஜனங்கள்மேல் அதிகாரம் இதனால் கர்வம் அடையாதே. காலம் எல்லாவற்றையும் நொடியில் கவர்ந்து விடும், இந்த உலகம் மாயமயமானது என அறிந்து, விதிப்படி பரம நிலைக்கு செல்.- அது முற்றிலும் உண்மையே, யாரையும் கண்டு ஏசவோ, எரிச்சல் பாடவோ வேண்டாம். நம் செல்வம் மற்றவரை விட அதிகம் என இறுமாறுதலும் வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-அக்-201912:13:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni எவ்ளோகோடீன்னாலும் என்னங்க ஒளுங்க சாப்பிடவும் முடியாதுங்க பலகோடீசுவர்ணங்களால் இது உண்மை பலகோடிகள் அதிபதி யான ஒரு பெரிய VIP சொன்னது இவ்ளோ சொத்து இருக்கு ஆனால் அதைவிட கொடுமையான வியாதிகள் இருக்கே மேக்சிமம் மாத்திரைகள் தான் ஆகாரம் உணவு துண்ணமுடியாது துன்னாலும் உடனே வாந்தி பேதி என்று அவஸ்த்தை ட்ரிஸ் ஏத்தி வீட்டுக்குவரும் நிலைமை எதுவுமே அளவோடு இருந்தால் நல்லது எவ்ளோ சேலைகள் இருந்தாலும் ஒரேநேரத்தில் ஒரு சேலையேதான் பீரோ நெறைய வேஷ்டிகள் சட்டைகள் இருந்தாலும் ஒரு நாளுக்கு மூன்று மாற்றினாலும் ஒரே வேஷ்டியும் சொக்காயும் தான் போட்டுப்போம் இருக்கே என்று நாலுவேற்றி ஒண்ணுமில்லையோன்னு என்று காட்டமுடியுமா .
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
19-அக்-201921:05:33 IST Report Abuse
VELAN Sஇப்படியே சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக்கிறீங்க . அந்த சத்தியா நாதெள்ளா நல்ல எக்ஸார்ஸிஸ் பண்ணி உடம்பை நன்றாக வைத்து நன்றாகத்தான் சாப்பிடறாரு என்கிறார்கள் . அதில்லைங்க , ஒரு பெண்டாட்டிக்கு பத்து பெண்டாட்டி வச்சிருப்பாரு , நம்மாலே முடியுமா . இப்படி எவ்ளவோ இருக்குங்க . அதுசரி . இவர் என்ன பெரிசா சம்பாதிக்காலையே . நம்ம ப்ரியங்கா சோப்ராவின் அஞ்சு நிமிச குத்தாட்டத்திற்கு ஐநூறு கோடி குடுக்க ஆட்கள் ரெடியா இருக்காங்க . முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்கங்க , இந்த உலகத்திலே , எவ்வளவு பெரிய அறிவாளியையும் சம்பாத்தியத்தில் மிஞ்சுவது கிளாமர் செக்ஸ் காட்டும் குத்தாட்ட நடிகைகள்தான் . அதே மாதிரி கிளாமர் ஹீரோ க்களையும் யாரும் மிஞ்ச முடியாது . ஷாருக்கான் போடும் பேண்ட் சட்டை விலைகள் சத்தியா நாதெள்ளாவின் சம்பளத்தை விட அதிகமா இருக்க வாய்ப்புண்டு . இந்த உலகம் , இன்னம் நல்ல மாற வேண்டும் , இல்லேயேல் , கடவுளாலும் இந்த உலகத்தை காப்பாற்ற முடியாது ....
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
18-அக்-201913:51:37 IST Report Abuse
Ray இங்கே தனியார் கம்பெனி அக்கவுண்டண்ட்டுக்கு ஆறு லக்ஷம் போனஸாமே அவருக்குள்ள விசேஷ தகுதி? ஊரறிந்ததுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X