அயோத்தி விவகாரத்தில் அனாவசிய விவாதங்களை 'தவிருங்கள்!'

Updated : அக் 18, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (17)
Advertisement
அயோத்தி,விவகாரம்,விவாதங்கள்,தவிருங்கள்

புதுடில்லி:அயோத்தி விவகாரத்தில், செய்திகளை வழங்கும் போது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுமாறும், நாட்டில் பதற்றத்தை உண்டாக்கும் விதமான அனாவசிய விவாதங்களை தவிர்க்குமாறும், செய்தி சேனல்களுக்கு, என்.பி.எஸ்.ஏ., எனப்படும், செய்தி ஒளிபரப்பு தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விவகாரத்தில், ஹிந்து - முஸ்லிம் தரப்பு இறுதி வாதங்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.


ஒத்திவைப்பு


இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. தலைமை நீதிபதி அடுத்த மாதம், 17ல் பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து, அதற்கு முன், தீர்ப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், செய்தி சேனல்களின் நிகழ்ச்சிகளை கண்காணிக்கும், என்.பி.எஸ்.ஏ., எனப்படும், செய்தி ஒளிபரப்பு தர ஆணையம், அனைத்து செய்தி சேனல்களுக்கும், சில உத்தரவுகளை பிறப்பித்துஉள்ளது.


விசாரணை


இது குறித்து, என்.பி.எஸ்.ஏ., வெளியிட்டுள்ள இரண்டு பக்க அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அயோத்தி வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்த விசாரணை தொடர்பாகவோ, இறுதி தீர்ப்பு குறித்தோ, ஊகங்கள் அடிப்படையில் செய்தி வெளியிடக் கூடாது. 'டிவி' செய்தியாளரோ, ஆசிரியரோ, நீதிமன்றத்தில் இருந்து உறுதியான ஆவணங்கள் வெளியாகும் வரை, எந்த தகவலையும் அவசரப்பட்டு வெளியிடக் கூடாது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சிகளை, ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது. இறுதி தீர்ப்பு வெளி யான பின், ஒரு தரப்பினரின் கொண்டாட்டங்களையும், மற்றொரு தரப்பினரின் எதிர்ப்பையும் ஒளிபரப்ப வேண்டாம்.அயோத்தி விவகாரம் குறித்து ஒளிபரப்பப்படும் செய்தி மற்றும் நிகழ்ச்சிகள், ஒரு தரப்பினருக்கு சார்பாகவும், மற்றொரு தரப்பினருக்கு எதிராகவும் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

மேலும், விவாதங்களின் போது, மிக கடுமையான கருத்துகளை யாரும் தெரிவித்து விடாமல் இருப்பதில் கவனம் தேவை. அனாவசிய விவாதங்களால், நாட்டில் தேவையற்ற பதற்றம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


வழக்கறிஞர் தவான் மீது புகார்!


அயோத்தி வழக்கின் இறுதி நாள் விசாரணையின் போது, ஹிந்து மகா சபை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், 'அயோத்தியில் தான் ராமர் பிறந்தார்' எனக்கூறி, அதற்கான வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த ஆவணங்களை, முஸ்லிம் அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான், நீதிபதிகள் முன்னிலையி லேயே சுக்குநுாறாக கிழித்தெறிந்தார். இது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 'நீதிமன்ற அறையில், ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்ட வழக்கறிஞர் ராஜிவ் தவான் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற, 'பார்' கவுன்சிலில், ஹிந்து மகா சபை அமைப்பினர் சார்பில், நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.


வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தார் கோகோய்!


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இன்று, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் புறப்பட திட்டமிட்டு இருந்தார். அங்கிருந்து, மத்திய கிழக்கு நாடான எகிப்து தலைநகர் கெய்ரோ, தெ.அமெரிக்க நாடான பிரேஸில், அமெரிக்காவின் நியூயார்க் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, இம்மாதம், 31ல், டில்லி திரும்புவதாக திட்டமிடப் பட்டு இருந்தது.

அயோத்தி இறுதி தீர்ப்பு குறித்து, அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற நீதிபதிகளுடன் விவாதிக்க வேண்டி இருப்பதால், தன் வெளிநாட்டு பயணத்தை, தலைமை நீதிபதி ரத்து செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சமத்துவம் - Chennai,இந்தியா
18-அக்-201920:28:49 IST Report Abuse
சமத்துவம் அப்போ சமூக வலைதளங்களில் வருபவைகளை என்ன செய்ய போகிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-அக்-201917:39:49 IST Report Abuse
Endrum Indian அய்யயோ அப்போ அவங்க ரேட்டிங் டி ஆர் பி ரொம்ப தாழ்ந்து போய் விடுமே இந்த மாதிரி திருக்கு முறுக்காக விவாதமேடை நடத்தாவிடில்???இப்போ வருமே மீடியா கிட்டேயிருந்து இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று ஒரே டப்பா தட்டுமே???
Rate this:
Share this comment
Cancel
18-அக்-201915:31:33 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதத்தில், இராமேஸ்வரத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த இணக்கமான சூழலை வர்ணித்திருப்பார். குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களை வாடிக்கியாளர்களாக கொண்டு சிறு கடைகள் பலவற்றை முஸ்லிம்கள் நடத்தினார்கள். அயோத்தியிலும்கூட இந்துக்களுடன் இணக்கமாக வாழ நினைக்கும் பல முஸ்லீம் பிரிவினர்கள் தயாராக்க உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். இவர்களே கலவரம் தூண்ட காரணமாகிறார். மக்கள் (இந்துக்கள், முஸ்லிம்கள் ) இவர்களை கண்டுகொண்டு புறம்தள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X