அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாவடக்கத்துடன் பேசுங்கள் சீமானுக்கு தா.பா., அறிவுரை

Added : அக் 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement

மதுரை ''நாம் தமிழர் கட்சி சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும். கொலையை நியாயப்படுத்துவது கண்டிக்கதக்கது,''என இ.கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை நீரை வீணாக்காமல் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள் விலை உயர்ந்துள்ளது. உரிய உரங்கள் கிடைப்பதில்லை.
ராஜிவ் படுகொலையை நேரில் பார்த்தவன் நான். அவருடன் நான் மட்டுமே அருகில் இருந்தேன். நாம் தமிழர் கட்சி சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும். கொலையை நியாயப்படுத்துவது கண்டிக்கதக்கது. சீமான் பேச்சால் ஈழம் போல தமிழகத்திலும் சகோதர படுகொலை அபாயம் உருவாகும்.முதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் என்பது மாலை போடுவது போல்தான். டாக்டர் பட்டம் வழங்குவதால் பல்கலைக்கு ஏதோ காரியம் நடக்க வேண்டியுள்ளது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-அக்-201905:54:58 IST Report Abuse
 Muruga Vel தானே பேசி .. அதுக்கு தானே சிரிக்கும் சீமான் வைக்கோவை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும் … இல்லாட்டி களி நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
18-அக்-201905:26:35 IST Report Abuse
Raj "நாம் கொலைகாரர்" கட்சி தலைவர் நாக்கை மட்டுமல்ல உடலின் எல்லா பாகங்களையும் அடக்க வேண்டிய நிலை வரும்.
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
18-அக்-201904:08:15 IST Report Abuse
சமத்துவம் இடு பொருட்கள் எதற்கு? இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X