பொது செய்தி

தமிழ்நாடு

13ம் நூற்றாண்டு சிவன் கோயில்: சிதிலமடைந்த கல்வெட்டுகள்

Added : அக் 17, 2019
Share
Advertisement
சிவகங்கை,:திருப்புவனம் நெடுங்குளம் அருகே 13ம் நுாற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட சிவன் கோயில் சிதிலமடைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் உள்ளது.நெடுங்குளம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள இக்கோயில் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி, பேராசிரியர் அழகுமணி ஆய்வு மேற்கொண்டனர்.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி
13ம் நூற்றாண்டு சிவன் கோயில்: சிதிலமடைந்த கல்வெட்டுகள்

சிவகங்கை,:திருப்புவனம் நெடுங்குளம் அருகே 13ம் நுாற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட சிவன் கோயில் சிதிலமடைந்த நிலையில் கல்வெட்டுகளுடன் உள்ளது.நெடுங்குளம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள இக்கோயில் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி, பேராசிரியர் அழகுமணி ஆய்வு மேற்கொண்டனர்.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டுள்ளது. இவ்விடத்தில் ஏற்கனவே இருந்த சிவன் கோயில் அழிந்துவிட்டதால், பாண்டிய மன்னர் அதே இடத்தில் மீண்டும் சிவன் கோயிலை கட்டி அதற்கு தன் பெயராலேயே 'சுந்தரபாண்டிய ஈஸ்வரம்' என பெயர் வைத்துள்ளார். அழிந்து போன பழைய சிவன் கோயிலின் சிலைகள், கோயிலை சுற்றி உடைந்த நிலையில் சிதறிக்கிடக்கின்றன.இங்குள்ள நான்கு கல்வெட்டுகளுமே முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகள், இவை 75 சதவீதம் அழிந்துவிட்டன. மீதமுள்ள கல்வெட்டும் சிதையும் நிலையில் உள்ளன. கோயில் நடுமண்டப உள் தென் பகுதியிலும், வெளியே அதிஷ்டான பகுதி குமுத வரிகளிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மாறவர்மன் சுந்தரபாண்டியனில் நேரடி பார்வையில் கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்பர் என்ற திருநாவுக்கரசருக்கு இக்கோயில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்ட செய்தி கல்வெட்டில் உள்ளது. பொன்பற்றி உடையான் பழகிய பெருமாளான விழும்பாத ராயன் என்பவர் இந்தச்சிலையை எடுப்பித்துள்ளார்.

ஆனால் அப்பரின் திருவுருவம் கல்லால் ஆனதா, செம்பால் ஆனதா என்று தெரியவில்லை. திருநெல்வேலியை சேர்ந்த ஆளுடையான் என்பவர் கருங்காலிக்குடியில் பயிர்ஏறி விளைந்த நிலத்தை இறைவனுக்கு தேவதானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்துக்கு கடமை, வினியோகம், அந்தராயம், வெட்டிப்பாட்டம் உள்ளிட்ட வரிகள் இறையிலியாக வரிவிலக்கு அளிக்கப்பட்டன. தேவர்கம்மிகளுக்கும் (அறங்காவலர்), சிவபிராமணர்களுக்கும் சுந்தரபாண்டியனின் அமைச்சர் குருகுலராஜன் கோயிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்காக அளிக்கப்பட்ட கொடையை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவைக்கல புலவர் விழுப்பரையர், அடைக்கலம் தேடிவந்த கொங்கு நாட்டு அரசன் கொங்கராயன் பெயர்களும் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.மாறவர்மன் சுந்தரபாண்டியன் தன் படைப்பரிவாரங்களோடு இக்கோயிலுக்கு வந்து தன் மேற்பார்வையிலேயே இக்கொடைகளை அளித்துள்ளார். இக்கல்வெட்டுகள் கி.பி., 1224 மற்றும் 1235 ம் ஆண்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் செப்பேடுகளிலும் செய்தியாக பொறிக்கப்பட்டுள்ளன. அந்த செப்பேடுகள் எங்கு உள்ளதென்று தெரியவில்லை.ஸ்தபதி கார்த்தி கூறியதாவது:தேர்ந்தெடுக்கப்பட்ட கற்களால் அற்புதமாக கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அந்தராளம், நடுமண்டபம் என அழகிய முறையில் அமைக்கப்பட்ட இக்கோயில் பிறகால பாண்டியர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. கோயில் கருவறையில் ஆவுடைப்பகுதி சதுர வடிவில் காணப்படுகிறது. லிங்கம் கிடைக்கவில்லை. பிள்ளையார் சிலையும், திரிசூலக்கல்லும் சிதைந்த நிலையில் வெளியே மண்ணில் புதைந்துள்ளது. விமானம் சிதைந்து போயுள்ளது, என்றார்.அன்னியர் படையெடுப்பால் இப்பகுதியில் முன்னர் வாழ்ந்த மக்கள் ஊரை காலி செய்து சென்றுவிட்டனர். சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகளை தவிர செப்பேடு உள்ளிட்டவை கிடைக்கவில்லை.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியை தொடர்பு கொள்ள: 73391 09733

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X