பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரம் பெற்ற கட்சிகள் எவை தேர்தல் ஆணையம் வெளியீடு

Added : அக் 17, 2019
Advertisement

சென்னை, தமிழகத்தில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், சுயேச்சை சின்னங்கள் விபரத்தை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ெவளியாகலாம் என்ற, எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில், தலைமை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள், 10 உள்ளன. அங்கீகாரம் இல்லாத, பதிவு செய்யப்பட்ட கட்சிகள், 247 உள்ளன. இதன் விபரத்தை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அ.தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., - தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளாக உள்ளன.பா.ம.க., உட்பட மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் உள்ளன.ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தலில், கட்சி ரீதியாக போட்டியிட முடியாது. இதில் போட்டியிடுவோர் அனைவருமே, சுயேச்சையாக கருதப்படுவர்.ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோருக்கு, சாவி, சீப்பு, கார் ரேடியோ, ஹெல்மெட் என, 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோருக்காக, பூட்டு சாவி, ஆட்டோ ரிக் ஷா, ஏணி, கத்தரிக்காய், மேஜை, மொபைல் போன், திராட்சை, வாழைப்பழம் என, 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.அதேபோல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சைகளுக்கு, பதக்கம், கேரம் போர்டு, கம்ப்யூட்டர், பஸ் உட்பட, 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X