அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அசுரன்' படத்துக்கு பாராட்டு ஸ்டாலினுக்கு ராமதாஸ் 'பாடம்'

Added : அக் 17, 2019 | கருத்துகள் (17)
Advertisement
'அசுரன்' படத்துக்கு பாராட்டு  ஸ்டாலினுக்கு ராமதாஸ் 'பாடம்'

சென்னை:'அசுரன்' படத்தை பார்த்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அப்படத்தின் கதாநாயகன் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.இதை அறிந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 'முரசொலி அலுவலகத்திற்காக சென்னையில் வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைக்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.'அசுரன்' படத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை குறிப்பிட்ட ஜாதியினர் கைப்பற்றும் விதமாக கதைக் களமும் காட்சி அமைப்பும் உள்ளது.இந்த படத்தை நேற்று முன்தினம் ஸ்டாலின் பார்த்தார். பின் கதாநாயகனாக நடித்த தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனை தொலைபேசியில் அழைத்து பாராட்டி உள்ளார்.இதுதொடர்பாக ஸ்டாலின் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:அசுரன் படம் மட்டுமல்ல; பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தை சாடும் ஜாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்.கதை களம் வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுக்கள்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இந்நிலையில் அசுரன் படத்தைப் பாராட்டிய ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல; பாடம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். ஆஹா... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று 'முரசொலி' நாளிதழ் அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
puratchiyalan - Nagercoil,இந்தியா
22-அக்-201916:36:19 IST Report Abuse
puratchiyalan பஞ்சமி, நோஞ்சமி ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு அரசு டாக்டர் தைலாபுரம் தோட்டம் ஏக்கர் கணக்கில் வாங்க முடியுமா? எப்படி வாங்கினீர்கள் ? காடு வெட்டி குருவுக்கு ஐநூறு கோடி ருபாய் சொத்து எப்படி வந்தது ? அதை அவரிடம் கொடுத்து வைத்தது யார் ? இப்போது அந்த சொத்துக்கள் யாரிடம் உள்ளது ?
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-அக்-201910:10:50 IST Report Abuse
மனிதன் intha thiruttu munnetra katcjiyai yevaraalum asaikkamudiyaathu
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-அக்-201907:18:48 IST Report Abuse
blocked user முகவிடம் பாடம் கற்ற மருத்துவர் எப்படி யோக்கியராக இருக்கமுடியும்? எப்படியோ பஞ்சமி நிலத்தை முக ஆட்டையை போட்டுவிட்டார் என்ற ரகசியத்தை வெளியிட்டு சுடலைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிரந்தர எதிரி என்ற அளவுக்கு வந்துவிட்டார் போலி மருத்துவர் இராமதாஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X