அயோத்தி வழக்கு: வக்கீல் 'நாடகம்'

Updated : அக் 19, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 அயோத்தி வழக்கு: வக்கீல் 'நாடகம்'

புதுடில்லி:அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அறையில், சினிமாவில் வரும் கோர்ட் காட்சிகளைப் போல், முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் நடந்து கொண்டார். ஹிந்து மகாசபை தாக்கல் செய்த ராமஜென்ம பூமியில் ராமர் பிறந்தார் என்பதை நிரூபிக்கும் வரைபடங்கள் உடைய ஆவணங்களை கிழித்து எறிந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் தவான்.

ஹிந்து மகா சபைக்காக ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆவணங்களை காட்டி வாதாடினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தவான், ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். இதை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வும் ஏற்றது.

இதற்கு விகாஸ் சிங், ''ஆவணங்களை ஆதாரமாக காட்ட முயற்சிக்கவில்லை,'' என
தெரிவித்தார். ஆனால் தவான், தொடர்ந்து சத்தமாக பேசினார்.அப்போது ரஞ்சன் கோகோய், ''அந்த ஆவணத்தை ஆதாரமாக ஹிந்து அமைப்புகள் காட்டவில்லை. அந்த ஆவணம்
பொருத்தமற்றது என கருதினால், நீங்கள் கிழித்துக்கொள்ளுங்கள்,'' என்றார். ஒரு பேச்சுக்கு
நீதிபதி கூறியதும் தவான், அந்த ஆவணத்தை பல துண்டுகளாக கிழித்து எறிந்தார் இது கோர்ட் அறையில் இருந்த வழக்கறிஞர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

நாடக காட்சி போல் வாதங்களை வைத்து பேசுவது தவானுக்கு புதிது அல்ல. 2014 மே 6 ல், சஹாரா வழக்கில், தவானின் வாதங்கள், நீதிபதிகள் இடையே ஒரு வித பதற்றத்தை
ஏற்படுத்தியது. அயோத்தி வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,
நீதிபதிகள் பாப்தே, சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் அமர்வுக்கு, தவானின் செயல்கள் புதிய அனுபவம்.

இந்த வழக்கில், வாதம் துவங்கிய முதல் நாளான ஆக.,6ல், அனைத்து தரப்புக்கும் வாதங்கள் முன்வைக்க போதிய நேரம் அளிக்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உறுதி அளித்தார். அதற்கு தவான், ''அதை நான் நம்புகிறேன்'' என நக்கலாக தெரிவித்தார். கோபம் அடைந்த கோகோய் ''இதில் சந்தேகம் உள்ளதா,'' என கேள்வி எழுப்பினார். அதற்கு தவான் ''கொஞ்சம் சந்தேகம் உள்ளது,'' என பதில் அளித்ததும் தலைமை நீதிபதி, ''கோர்ட்டின் மாண்பை மனதில் வைத்துக் கொண்டு பேசுங்கள்,'' எனக் கூறினார்.

அயோத்தி வழக்கின் வாதங்கள் துவங்கிய சில நாட்களில், தவான் வாதாடும் போது, நீதிபதி பூஷண் சில கேள்விகளை எழுப்பினார். இதனை விரும்பாத தவான், ''எனது குரலில் மிரட்டல் தொனி ஏதும் உள்ளதா?'' என நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். தவானிடம் கேள்வி எழுப்பிய நீதிபதியை, கடுமை காட்டுகிறார் என குற்றம்
சாட்டியது குறித்து தவானிடம், நீதிபதிகளும், எதிர்தரப்பு வழக்கறிஞர்களும் அதிருப்தியை
தெரிவித்தனர்.

மற்றொரு நாள், சர்ச்சைக்குரிய நிலத்தில் முஸ்லிம் தரப்புக்கு உள்ள உரிமை தொடர்பாக,
நீதிபதி எழுப்பிய கேள்வியை தவான் விரும்பவில்லை. அவர் நீதிபதிகளிடம், ''வாதங்கள்
துவங்கியது முதல், முஸ்லிம் தரப்பிடம் மட்டுமே அனைத்து கேள்விகளும் கேட்கப்படுகின்றன. ஹிந்து அமைப்புகளிடம் கேள்வி கேட்கவில்லை,'' எனக்கூறினார்.

கடைசி நாள் வாதத்தின் போது, காலையில் ஆவணங்களை கிழித்து போட்டு தனது நாடகத்தை தவான் அரங்கேற்றினார். மதியம் நடந்த விசாரணையின் போது, நீதிமன்றத்தில் தவான்
கூறுகையில், ''அந்த ஆவணம் பொருத்தமற்றது என கருதினால், அதனை கிழித்து எறியலாம் என தலைமை நீதிபதி கூறினார். எனவே அவர் அனுமதியுடன் தான் கிழித்து எறிந்தேன்,'' என்றாரே பார்க்கலாம்.

உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வு முன் ஹிந்து மகா சபை தாக்கல் செய்த
ஆவணங்களை, முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் கிழித்து எறிந்தது தனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை என அந்த ஆவணங்களை தயாரித்தவரான முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிஷோர் குணால் கூறியுள்ளார்.அந்த வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டால், தோற்று விடுவார் என்பது வழக்கறிஞர் என்ற முறையில் தவானுக்கு நன்குதெரியும் எனவும் கூறியுள்ளார்.

வி.பி.சிங், மற்றும் சந்திரசேகர் ஆட்சி காலத்தில், உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு
அதிகாரியாக நியமிக்கப்பட்ட கிஷோர், 1989- 90ல், அயோத்தி விவகாரத்தில், ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடான பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்தவர். இவர் கடந்த 2016 ல் வெளியிட்ட 'அயோத்தியா ரீவிசிட்டட்' (Ayodhya Revisited) புத்தகத்தில் வெளியிட்ட வரைபடம் மூலம், ராமர் பிறந்த இடம் குறித்த உறுதியான ஆதாரம் உருவானது.

கிஷோர் கூறுகையில், ''ராமர் பிறந்த இடம் என்பது நம்பிக்கை அல்லது ராமர் அங்கு தான்
பிறந்தார் என்ற கற்பனை அடிப்படையிலானது என, கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்கள்
வாதிடுகின்றனர்.2010 ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்த 'நம்பிக்கை' குறித்து அழுத்தமாக தெரிவித்துள்ளது,'' என்றவர், தொல்லியல் துறை உதவியுடன் 5 விதமான ஆதாரங்களை வைத்து, மிக பொருத்தமாக வரைபடத்தை தயாரித்ததாகவும் கூறியுள்ளார்.

இதில் முதலாவதாக, 1858ல் பாபர் மசூதி நிர்வாகி சையத் முகமது கதீப், பஞ்சாபை சேர்ந்த 25
சீக்கியர்கள் அடங்கிய குழு, மசூதியை கைப்பற்ற முயற்சி செய்ததாக போலீசில் அளித்த புகார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த புகாரில், மசூதியின் மத்தியில், பல நுாற்றாண்டுகளாக ஹிந்துக்கள் வழிபட்டதற்கான அடையாளம் இருந்ததாக கூறப்பட்டுள்ளதாக, கிஷோர் தெரிவித்தார்.

ஆஸ்திரியாவை சேர்ந்த பாதிரியார் ஜோசர் டிபென்தலெர் 1760 களில், அவாத் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டார். அவர், கோவில் கட்டமைப்பு குறித்து விளக்கி கூறியுள்ளார். இது வரைபடம் தயாரிக்க இரண்டாவதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக கிஷோர் தனது புத்தகத்தில், ராமர் கோவில், 1528 ல் பாபராலோ அல்லது அல்லது அவரது தளபதி மிர் பகியாலோ அழிக்கப்படவில்லை.

1660 களில் அவுரங்கசீப்பால் தான் கோவில் இடிக்கப்பட்டது என்ற கருத்தை உறுதி செய்ய, டிபென்தலர் முயற்சி செய்தார். ஹிந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில்,
அவுரங்கசீப், கோயிலை இடித்திருந்தாலும் ஹிந்துக்கள் தொடர்ந்து வருகின்றனர், கோவில் வளாகத்தை சுற்றி வருகின்றனர். தரையில் விழுந்து வணங்குகின்றனர் என, பாதிரியார்
தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ராமஜென்ம பூமி குறித்து, 1870 களில் பைசாபாத் துணை கமிஷனர் பி. கார்ஜெனியின் கருத்து, வரைபடத்தை தயாரிக்க நான்காவது ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக, 1813-14ல் பிரான்சிஸ் புக்கனனின் சர்வே பயன்படுத்தப்பட்டது.கடந்த செப்டம்பரில் உச்சநீதிமன்றம்,இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததுடன்,வெறும் கருத்துகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தது. நீதிபதிகளின் கருத்தை ஒரு சார்பானது என தெரிவித்த கிஷோர், ''ஹிந்து ஆவணங்களில் மட்டும் குறை காண்பதாகவும், 'ஏஐபிஎம்ஏசி'(அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கை குழு) ஆவணங்கள் குறித்து கருத்து தெரிவிப்பது இல்லை,'' எனவும்
கூறினார்.

மேலும் அவர், ராமஜென்ம பூமியில், கண்டுபிடிக்கப்படாத பல ஆவணங்கள் உள்ளன. நான் குறிப்பிடுபவை, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நுாலகத்தில் இந்திய அலுவலக ஆவணங்கள், பரோடா ஓரியண்டல் ஆராய்ச்சி மையம் மற்றும் பனாரஸ் நுாலகங்களில் உள்ளதாகவும்
தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-அக்-201908:27:35 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த மேப் ஆதாரம் ஏற்கனவே அலஹாபாத் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. பதிவாகியுள்ளது. தீர்ப்பில்தான் குறிப்பிடவில்லை . கிழித்துக்கொள்ளுங்கள் என பைத்தியத்திடம் சொன்னால் முதல்வேலையாக அதைத்தான் செய்யும் .முஸ்லீம் தரப்பு இவரை வக்கீலாகப்போட்டு அவர்களின் அறிவைப் பறைசாற்றியுள்ளனர் . (ஆனாலும் கிழித்த செயல் தீர்ப்பின் போக்கை பாதிக்காது . என்பது திண்ணம்)
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-201907:58:39 IST Report Abuse
Sriram V This guy is congies chamcha so his behaviour will be like his boss. Judiciary must give slap him with contempt of court
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
18-அக்-201904:11:29 IST Report Abuse
blocked user இப்பொழுது நீதிபதியாக இருப்பவர்களும் இது போல நடந்து கொண்டு நீதிமன்றத்தின் 'மாண்பை' காப்பாற்றியவர்கள்தான்... அவர்களுக்கு இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பழைய தொழில் நுணுக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X