சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி,: 'ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் வழக்கில் காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை அக்., 24 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு செய்வதற்கு 2007ல் அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு
சிதம்பரம், காவல்,விசாரணை, அமலாக்கத்துறை, அனுமதி

புதுடில்லி,: 'ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் வழக்கில் காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை அக்., 24 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு செய்வதற்கு 2007ல் அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன.இந்த வழக்கில் ஆக. 21ல் சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. கடந்த செப். 5ல் இருந்து டில்லியில் உள்ள திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக விசாரிக்கும் அமலாக்கத் துறை சிதம்பரத்தை நேற்று முன் தினம் கைது செய்தது. டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த 'வாரன்ட்' அடிப்படையில் சிதம்பரம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கேட்டது.

அக்., 24ம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அமலாக்கத் துறையின் விசாரணையின்போது வீட்டு உணவு மருந்துகள் மேற்கத்திய பாணி கழிப்பறை வசதி அளிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கிலும் சிதம்பரத்தின் காவல் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Rajasekaran - singapore,சிங்கப்பூர்
18-அக்-201916:32:40 IST Report Abuse
K.Rajasekaran இவர் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் சிவகங்கை தொகுதிக்கு செய்யாதவர், இன்னும் அந்த தொகுதி தமிழ்நாடு பின்தங்கிய தொகுதியாகத்தான் உள்ளது, தனது குடும்பத்தை மட்டும் வளப்படுத்தி மக்களை மறந்ததால் அதன் பாவ செயல் இன்று அனுபவிக்கிறார்.
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201915:14:24 IST Report Abuse
padma rajan ஒரு தூசு தும்பு கூட இவர் மேல் படக்கூடாது அப்படித்தான் நடந்துகொள்வார் வெயிலில் போக மாட்டார். இப்போது திகார் ஜெயிலில் தூசு படிந்துள்ள தரையில் உறங்குகிறார். பாவம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் வீட்டிற்கு போய் வரட்டும் லீவு கொடுங்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-அக்-201912:08:26 IST Report Abuse
Pugazh V Also, siva the entire ministry in under the control of another government for more than 5 years, no tampering of document could have been possible by the accused, since he's not produced with access to the documents for these years, as he's not even s member of parliament
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X