பொது செய்தி

இந்தியா

அமிதாப்புக்கு என்ன ஆச்சு? 3 நாட்களாக தீவிர சிகிச்சை

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை: மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த, 1969ல் ஹிந்தி படங்களில் நடிக்கத் துவங்கிய, அமிதாப் பச்சன், பல்வேறு படங்களில், ஆக்ரோஷமான இளைஞர் வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர். 'ஜன்ஜீர், ஷோலே, தீவார், திரிசூல், டான், காலா

மும்பை: மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.latest tamil newsகடந்த, 1969ல் ஹிந்தி படங்களில் நடிக்கத் துவங்கிய, அமிதாப் பச்சன், பல்வேறு படங்களில், ஆக்ரோஷமான இளைஞர் வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர். 'ஜன்ஜீர், ஷோலே, தீவார், திரிசூல், டான், காலா பத்தர்' உள்ளிட்ட படங்கள் அவரை, பாலிவுட்டின் மிகப் பெரிய ஹீரோவாக உயர்த்தியது. கடந்த, 1984ல், சினிமாவில் இருந்து விலகி, தனது நண்பரான, காங்., முன்னாள் பிரதமர் ராஜிவ் விருப்பப்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அப்போது, 68.2 சதவீத ஓட்டுகள் பெற்று, உத்தர பிரதேசத்தின் அலகாபாத் தொகுதியில் வென்றார். ஆனால், மூன்று ஆண்டுகளில், மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார்.

தனியார், 'டிவி'யில் இவர் நடத்தி வரும், 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இவருடைய மனைவியான, முன்னாள் நடிகை ஜெயா பச்சன், தற்போது, எம்.பி.,யாக உள்ளார். இவருடைய மகன், அபிஷேக் பச்சனும், மருமகள், ஐஸ்வர்யா ராயும், பிரபல திரை நட்சத்திரங்கள். அமிதாப், மூன்று முறை தேசிய திரைப்பட விருதுகள், 12 பிலிம் பேர் விருதுகள் பெற்றுள்ளார்.


latest tamil news
கல்லீரல் பிரச்னை:


கடந்த 1982ல் நடந்த ஒரு விபத்தின் போது, அமிதாப்புக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் 'ஹெப்பாடிடீஸ் பி' வைரஸ் இருந்துள்ளது. இந்த ரத்தம் அவருக்கு ஏற்றப்பட்டதன் விளைவாக, அவரது கல்லீரல் 75 சதவீதம் செயல் இழந்தது. அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை(அக்.,15) நள்ளிரவு 2 மணிக்கு, திடீர் உடல் நலக்குறைவால், சிட்டி மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு(ஐசியூ) இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
18-அக்-201912:44:50 IST Report Abuse
J.Isaac போதும் என்கிற மருந்தே பெரிய மருந்து
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
18-அக்-201905:47:46 IST Report Abuse
 Muruga Vel சின்ன வயசில் பள்ளி கூடத்தில் வாத்தியார் இந்த கதையை சொல்லுவார் .. எக்ஸாமில் வேப்ப மரத்தை பற்றி கட்டுரை வரும் என்று ஒரு மாணவன் எதிர் பார்த்து படித்து சென்றான் ..கேள்வி தாளில் பசு மாட்டை பற்றி கட்டுரை எழுத சொன்னார்கள் ..மாணவன் பக்கம் முழுவதும் வேப்ப மரத்தை பற்றி எழுதிவிட்டு கடைசியில் பசு மாட்டை வேப்ப மரத்தில் கட்டி வைப்பார்கள் என்று எழுதி முடித்தான் ..இந்த செய்தி படித்தவுடன் அந்த கதை ஞாபகத்துக்கு வந்தது ..
Rate this:
Cancel
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
18-அக்-201902:05:34 IST Report Abuse
Saravanan AE வருத்தமாக உள்ளது. அவர் உடல்நலம் பூரணமாகப் பெற்று ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X