பொது செய்தி

இந்தியா

சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை: உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை வாதம்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (31)
Advertisement
சொத்து, சேர்ப்பதில் ,சிவகுமார், உலக சாதனை, உயர் நீதிமன்றத்தில், அமலாக்க துறை, வாதம்

புதுடில்லி:'சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை படைத்துள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு ஆவணமே இல்லை. பல கோடி ரூபாய் மற்றவர்களின் வங்கிக்கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனையின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளன' என அவருக்கு ஜாமின் வழங்க டில்லி
உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் கர்நாடக காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர்
சிவகுமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின் டில்லியில் கைது செய்தனர்.பின் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி அங்குள்ள திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார். அக். 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு
உள்ளது.

சிவகுமார் தரப்பில் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இம்மனு நேற்று மதியம் 3:45 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பிலான வழக்கறிஞர் நடராஜ் நீதிமன்றத்துக்கு வராததால் அரைமணி நேரம் ஒத்திவைக்கும்படி அவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் கோரினர்.

இதைக் கேட்டு கோபமடைந்து நீதிபதி கூறியதாவது:நீதிமன்றம் முன் கண்ணாமூச்சி
விளையாடுகின்றீர்களா? கொஞ்சமாவது மதிப்பளியுங்கள். இந்த செயல்பாடு சரியில்லை.
ஏற்கனவே 15 நிமிடம் தாமதமாகியுள்ளது.அந்த ஒரே ஒரு வழக்கறிஞர் மட்டுமா உள்ளார்.
நீதிமன்றத்தின் நேரத்தை விரயமாக்குகின்றனர்.இனி நேரடியாக வந்து வாதாட தேவை இல்லை. அக். 19ம் தேதி நண்பகல் 12:30 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல்
செய்யுங்கள். இவ்வாறு கண்டனம் தெரிவித்து விட்டு நீதிபதி தன் அறையிருந்து
வெளியேறினார்.

சிறிது நேரத்தில் அமலாக்கத் துறை தரப்பிலான வழக்கறிஞர் நடராஜ் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் நீதிபதி அறைக்கு சென்று நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிப்பு கோரி
விசாரணை நடத்த அழைப்பு விடுத்தார்.அப்போது சிவகுமார் தரப்பிலான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியை அழைத்து நீதிபதி பேசினார். அவர் ஒப்புக் கொண்டதால் மீண்டும் விசாரணை துவங்கியது.

முதலில் அமலாக்கத் துறை தரப்பில் நடராஜ் முன்வைத்த வாதம்:விசாரணையின்போது
சிவகுமாருக்கு சொந்தமாக 300 இடங்களில் சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
அதற்கான ஆவணங்களை அவர் தாக்கல் செய்யாமல் விவசாயம் மூலம் சம்பாதித்ததாக
கூறினார்.

விவசாயம் செய்து அந்த அளவுக்கு சொத்து சேர்க்க முடியுமா? ஆவணங்களின் படி கடந்த 20 ஆண்டுகளில் விவசாயம் மூலம் 1.37 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.இதை கவனிக்கும் போது சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனையை படைத்துள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு ஆவணமே இல்லை.பல கோடி ரூபாய் மற்றவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனையின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளன.அவரது டில்லி வீட்டில் 8.59 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தன் பணம் தான் என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் பணம் எப்படி வந்தது என்பதை அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது.

சிவகுமார் செல்வாக்குமிக்க நபர் என்பதால் கண்டிப்பாக சாட்சியங்களை நாசப்படுத்தும்
வாய்ப்புள்ளது. அவரது 24 வயது மகளுக்கும் அவரது 86 வயது தாய் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்துகள்உள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கும் ஜாமின் வழங்கவில்லை. எனவே எந்த காரணத்துக்கும் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது.இவ்வாறு அவர்கூறினார்.

காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில் ''அமலாக்கத் துறை கூறுவதும் முற்றிலும் பொய். 8.59 கோடி ரூபாயில் சிவகுமாருக்கு சொந்தமானது வெறும் 47 லட்சம் ரூபாய் மட்டுமே. இது தொடர்பான பல வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் ஜாமின் வழங்க தகுதியுள்ளது. எனவே ஜாமின் வழங்க வேண்டும்'' என்றார்.இரு தரப்பிலும் இரண்டு மணி நேரம் வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தேதி
குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
21-அக்-201913:56:59 IST Report Abuse
jayanantham விஞ்ஞான ஊழல் செய்வதில் ஈரேழு பதினான்கு லோகத்திலும் அசைக்க முடியாத ஆற்றல் பெற்று சர்க்காரி யா கமிஷனையே கதி கலங்க வைத்த கட்டுமரத்தை மறந்து அமலாக்கத்துறையினர், வேறொருவரை முன்னிறுத்துவதென்பது, திருட்டு குடும்பத்தினருக்கு ஏற்படுத்தும் களங்கம். அது ஒரு வரலாற்றுப் பிழைக்கு அடிகோலும் செயலாகும். தயைகூர்ந்து உடனடியாக திருத்தி மாற்றறிக்கை சமர்ப்பிக் க மன்றாடி கழக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அவசரமாக ஆவண செய்யப்பெறும் என நம்புகிறோம். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
21-அக்-201912:32:54 IST Report Abuse
V.B.RAM சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை படைத்துள்ளார். நான் ஒப்புக்கமாட்டேன். தமிழகத்தின் பெருமையை கர்நாடகம் பறிக்கப்பறக்கிறது. கருணாவை விட சொத்து சேர்ப்பதில் நிச்சயம் யாரும் சாதனை படைக்கமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-அக்-201915:42:21 IST Report Abuse
இந்தியன் kumar கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் நிதி மந்திரி இவர் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X