பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' செலவுகளை வெளிப்படையாக்க உத்தரவு

Added : அக் 18, 2019
Advertisement

சென்னை:'ஸ்மார்ட் சிட்டி அம்ருத்' திட்ட செலவு விபரங்களை மத்திய அரசின் பொது நிதி கண்காணிப்பு இணையதளத்தில் சேர்க்க தமிழக அரசு நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு உத்தரவிட்டுஉள்ளது.நாடு முழுவதும் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் 500 நகரங்களில் அம்ருத் திட்டமும் செயல்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் 12 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் 32 நகரங்களில் அம்ருத் திட்டமும் செயல்படுத்தப் படுகிறது.மத்திய மாநில அரசுகளின் நிதியில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பெறப்படும் நிதி முறையாக செலவிடப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் மேற்கொள்ளப்படும் வரவு - செலவு கணக்கு விபரங்களை கணக்கு தணிக்கை துறை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்குகளை வெளிப்படையாக இணையதளத்தில் பதிவேற்றவும் முடிவு செய்யப்பட்டது.இதற்கான விபரங்களை பி.எப்.எம்.எஸ். என்ற மத்திய அரசின் பொது நிதி கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்ற மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளன. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அம்ருத் திட்டங்களை செயல்படுத்தும் துறைகள் பி.எப்.எம்.எஸ். தகவல் தொகுப்பில் சேரவில்லை.இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இது விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X