பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி பெண்ணுக்கு தேசிய நெசவாளர் விருது 'கோர்வை' ரக பட்டு சேலை நெய்தவருக்கு கவுரவம்

Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
காஞ்சி பெண்ணுக்கு தேசிய நெசவாளர் விருது 'கோர்வை' ரக பட்டு சேலை நெய்தவருக்கு கவுரவம்

காஞ்சிபுரம்,:மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கீதா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை 2014 முதல் சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்து வருகிறது.இந்த விருது வழங்கும் நடைமுறையை 2014ல் சென்னையில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தாண்டு முதல் ஆக.7 தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் 2017க்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு இந்திய அளவில் 11 பேரின் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.இதில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சேர்மன் சாமிநாதன் தெருவைச் சேர்ந்த ஆர்.கீதா 38 என்ற பெண் சிறந்த நெசவாளராக தேர்வாகியுள்ளார். இவர் திருவள்ளுவர் பட்டு கைத்தறி சங்கத்தின் உறுப்பினர். தேசிய விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது இவர் மட்டுமே.நற்சான்றுதேசிய நற்சான்றிதழுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து காஞ்சிபுரம் எம்.எம்.அவென்யூவைச் சேர்ந்த எம்.பி.செல்வகுமார் தேர்வாகி உள்ளார்.தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள கீதாவுக்கு 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் 15 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன் தாமரை பத்திரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதை விரைவில் பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் வழங்க உள்ளார்.நற்சான்றிதழ் பெற உள்ள செல்வகுமாருக்கு கைத்தறி துறையிலிருந்து நேரடியாக அவரது வீட்டிற்கே சான்றிதழ் அனுப்பப்படும்.
சிறப்பு என்னவிருது பெறும் கீதா நெய்த பட்டு சேலையின் சிறப்பம்சம்:* சேலையின் இரு பக்கமும் கோர்வை ரகத்தில் நெய்யப் பட்டுள்ளது* ஆறு நாடாக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன* மயில் சக்கரம் போன்ற பாரம்பரிய வடிவங்கள் சேலையில் இடம் பெற்றுள்ளன* இந்த சேலையின் மதிப்பு 30 ஆயிரத்து 800 ரூபாய்.* தாழம்பூ படிவத்துடன் கூடிய டிசைன் சேலையை நெய்ய ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
18-அக்-201915:52:00 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அரசு pillaiyaarpaalayam நெசவாளர்களது தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X