பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை அபார துவக்கம் - பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : அக் 18, 2019
Advertisement


கூடலுார், வடகிழக்கு பருவமழை துவங்கியவுடனேயே
பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து 2779 கன அடியாக அதிகரித்துள்ளது.பெரியாறு அணை நீரை நம்பி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் நெல் சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவமழை பெய்தால் இரண்டாம் போக நெல் சாகுபடியையும் முழுமையாக செய்து விடலாம்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கியவுடனேயே பெரியாறு அணை நீர்பிடிப்பில் கன மழை பெய்தது. தேக்கடியில் 31, பெரியாறில் 19.6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மழையால் 1976 கன அடியாக இருந்த நீர்வரத்து 2779 கன அடியாக அதிகரித்தது.
இதனால் நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 124
அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 1400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3420
மில்லியன் கன அடியாகும்.வைகைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வருஷநாடு மலைப்பகுதி மழையால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2,030 கன அடியும், மதுரை, ஆண்டிபட்டி- - சேடபட்டி குடிநீருக்காக வினாடிக்கு 60 கன அடியும் வெளியேறுகிறது.நேற்று காலை 6:00 மணிக்கு 2,048 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 4:00 மணிக்கு 3,040 கனஅடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 60.83 அடியாக உயர்ந்தது (மொத்த உயரம் 71 அடி).
- சோத்துப்பாறை வரத்து 599, வெளியேற்றம் 30. மஞ்சளாறு வரத்து 184, வெளியேற்றம் 10. மருதாநதி வரத்து 88, வெளியேற்றம் இல்லை. சண்முகாநதி வரத்து 31, வெளியேற்றம் இல்லை. சாத்தையாறு வரத்து, வெளியேற்றம் இல்லை.
மழையளவு
கூடலுார் 62 மில்லிமீட்டர், சண்முகாநதி 68, உத்தமபாளையம் 25.1, வீரபாண்டி 7. மஞ்சளாறு 21. மருதாநதி 27.2.
சோத்துப்பாறை 42. பேரணை 7. குப்பணம்பட்டி 15. ஆண்டிபட்டி 17.4. மதுரை 19.9.
சாத்தையாறு 17. மேட்டுப்பட்டி 25. கள்ளந்திரி 10.4. தனியாமங்கலம் 10. இடையபட்டி 6.17.
வீரகனுார் 29. கொடைக்கானல் 18 என மழையளவு பதிவானது.

அணைகளின் நீர் மட்டம் (அடி)
(நேற்றைய நிலவரம்)
பெரியாறு: 124 (மொத்தம் 152)
வைகை: 60.83 (71)
சோத்துப்பாறை: 126 (126)
மஞ்சளாறு: 45 (55)
சண்முகாநதி: 43.50 (79)
மருதாநதி: 52 (74)
சாத்தையாறு: -(29)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X