ராமநாதபுரம், :மீனவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் 'துாண்டில்' செயலியை மீன்வளத்துறை செயல்படுத்தி வருகிறது.தமிழக மீன்வளத்துறை சார்பில் 'துாண்டில்' செயலி துவக்கப்பட்டுஉள்ளது. இதில் வானிலை அறிவிப்புகள், மீன் வளம் நிறைந்த பகுதிகள், படகு உரிமையாளர், உரிமம் உள்ளிட்ட விபரங்கள், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், பயனாளிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும்.கடலில் படகுகளில் (வி.எச்.எப்) வயர்லஸ் தொடர்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் நடுக்கடலிலும் செயலி செயல்படும். கடலில் ஒரு படகில் இருந்து மற்றொரு படகிற்கு தொடர்பு கொள்தல், வானிலை அறிவிப்பு, கடலில் மீன் பிடி படகு இருக்கும் இடம் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்க முடியும்.இந்த செயலியில் அனைத்து மீனவர்களும் இணைக்கப்பட்டு வருகின்றனர். மீன் வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் கூறுகையில், இந்த செயலியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1520 விசைப்படகுகளில் 1116 படகுகள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக 4000 நாட்டுப்படகுகள் இணைக்கப்படவுள்ளன. அவசர காலங்களில் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE