பொது செய்தி

இந்தியா

பாக்., அகதி குழந்தைகள் பள்ளியில் சேர்க்க உத்தரவு

Added : அக் 18, 2019
Advertisement

புதுடில்லி, பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவரின் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளும்படி அரசு பள்ளி நிர்வாகத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அண்டை நாடான பாகிஸ்தானில் வசித்தவர் குல் ஷெர். ஹிந்து மதத்தை சேர்ந்த இவருக்கு அந்த நாட்டு அதிகாரிகள் பெரும் தொல்லை கொடுத்தனர். இதையடுத்து பாகிஸ்தானிலிருந்து நம் நாட்டின் டில்லிக்கு குடும்பத்துடன் அகதியாக வந்தார்.தன் மூன்று குழந்தைகளை டில்லியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க விரும்பினார். அவர்களது வயதை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது.இதையடுத்து குல் ஷெர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜிவ் சக்தேர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டில்லி மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்'குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மாநில அரசு தயாராக உள்ளது. விதிமுறைகள் தடையாக உள்ளன. எனவே மனிதாபிமானம் கருதி இவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்' என்றார்.குல் ஷெர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்'மனிதாபிமானம் பார்ப்பதற்கு எங்கள் கட்சிக்காரரின் குழந்தைகள் பிச்சைக்காரர்கள் அல்ல; கல்வி கற்பது அவர்களது உரிமை' என்றார்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனிதாபிமானம் காட்ட இவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என மனுதாரர் தரப்பு கூறுவது சரியான விஷயம் தான். பள்ளியில் சேர அனுமதி கோருவது அவர்களது உரிமை. பள்ளி நிர்வாகம் மூன்று குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X