அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள்; விழுந்தார் எம்.எல்.ஏ.,

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (48)
Advertisement
DMK, ஓட்டுக்கு, பணம், வழங்கல், தி.மு.க.,  விரட்டிய மக்கள்; விழுந்தார், எம்.எல்.ஏ.,

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, தி.மு.க.,வினரை கிராமத்தினர் தடுத்தனர். இதில், பெரியகுளம், எம்.எல்.ஏ., சரவணகுமார் கீழே விழுந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில், அக்., 21ல் தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் பணப் பட்டுவாடாவில் தீவிரமாக உள்ளனர்.மூலைக்கரைப்பட்டி அடுத்துள்ள கல்லத்தியில், பெரியகுளம், தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணகுமார் தலைமையில், தேனி மாவட்ட நிர்வாகிகள், தோட்டத்துடன் கூடிய வீட்டில் தங்கியிருந்தனர்.

நேற்று அங்கு, வாக்காளர்களை அழைத்து, ஓட்டுக்கு பணம் கொடுத்தனர். அதே ஊரைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தி.மு.க.,வினர் பண மூட்டைகளுடன், ஓட்டம் பிடித்தனர். இதனால், 2,000 ரூபாய் நோட்டுகள்கீழே சிதறின. அங்கிருந்து கிளம்ப முயன்ற,எம்.எல்.ஏ., சரவணகுமார் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

அங்கு, 2 லட்சத்து, 78 ஆயிரம் ரூபாய் சிக்கியது. தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜனார்த்தனன், அவற்றை பறிமுதல் செய்தார். எம்.எல்.ஏ., உள்ளிட்ட 10 பேர் மீது, தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


வடகிழக்கு பணமழை


நாங்குநேரியில் போட்டியிடுவது, காங்கிரசாக இருந்தாலும், பணப் பட்டுவாடாவை, தி.மு.க.,வே கவனித்தது. 70 சதவீதம் பேருக்கு தலா, 1,000 ரூபாய் கொடுத்து முடித்து விட்டதாக, தி.மு.க., தரப்பினர் கூறினர்.அ.தி.மு.க., தரப்பில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர். இருதரப்பினரும், எதிர் தரப்பினர் பணம் கொடுப்பதை கண்டுகொள்ளவில்லை. இதனால்,
தடையின்றி பண வினியோகம் நடந்தது.

சீவலப்பேரியை அடுத்துள்ள பர்கிட் மாநகரம் பகுதியில், அ.தி.மு.க., கிளைச் செயலர்
காஜாமைதீனிடம் இருந்து, 1.08 லட்சம் ரூபாயை, பறக்கும்படை தாசில்தார் மோகன்
தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.களக்காடு பகுதியில்,
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் மாரியப்பனிடம் இருந்து, 39 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்மநேரி கிராமத்தில், திடீரென போலீஸ் வாகனம்
வந்ததால், அ.தி.மு.க.,வினர், 50 ஆயிரம் ரூபாயை சாலையில் போட்டு ஓடினர். பணத்தை,
தேர்தல் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-அக்-201904:46:11 IST Report Abuse
meenakshisundaram ஆஹா ஸ்டாலினுக்கு என்னே ஒரு சந்தர்ப்பம் தனது கட்சிக்காரன் மேலே நடவடிக்கை எடுக்க ?தனது nermaiyai நிரூபிக்க?இந்த biriyani கட்சி திருந்தாது ,
Rate this:
Share this comment
Cancel
rajaraja cholan MA M.Phil - ciyt,மொராக்கோ
21-அக்-201919:43:09 IST Report Abuse
rajaraja cholan MA M.Phil பணம் கொடுக்கும் காட்சிகளை தேர்தலில் தடை செய்யலாமே...? மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-அக்-201916:17:17 IST Report Abuse
Endrum Indian என்னவோ அதிமுக மட்டும் தான் இப்படி செய்கின்றது என்று டப்பா தட்டிச்சே இந்த சுடலை மாயாண்டி????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X