பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி பெண்ணுக்கு தேசிய நெசவாளர் விருது: 'கோர்வை' ரக பட்டு சேலை நெய்தவருக்கு கவுரவம்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
காஞ்சிபுரம்: மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, கீதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை, 2014 முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது. இந்த விருது வழங்கும் நடைமுறையை, 2014ல், சென்னையில், பிரதமர் மோடி துவக்கி

காஞ்சிபுரம்: மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, கீதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை, 2014 முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது. இந்த விருது வழங்கும் நடைமுறையை, 2014ல், சென்னையில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தாண்டு முதல் ஆக.,7, தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


latest tamil news

மத்திய அரசின் சிறந்த நெசவாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள பெண் நெசாளர் கீதா.





இந்நிலையில், 2017க் கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு, இந்திய அளவில், 11 பேரின் பெயர் கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இதில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், சேர்மன் சாமிநாதன் தெருவைச் சேர்ந்த ஆர்.கீதா, 38, என்ற பெண், சிறந்த நெசவாளராக தேர்வாகி உள்ளார். இவர், திருவள்ளுவர் பட்டு கைத்தறி சங்கத்தின் உறுப்பினர். தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து தேர்வானது இவர் மட்டுமே.


latest tamil news

தேசிய நற்சான்றிதழுக்கு தேர்வாகியுள்ள எம்.பி.,செல்வகுமார்.





நற்சான்று



தேசிய நற்சான்றிதழுக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து, காஞ்சிபுரம் எம்.எம்.அவென்யூவைச் சேர்ந்த எம்.பி.செல்வகுமார் தேர்வாகி உள்ளார்.தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள, கீதாவுக்கு, 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 15 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன், தாமரை பத்திரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதை, விரைவில் பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் வழங்க உள்ளார்.

நற்சான்றிதழ் பெற உள்ள செல்வகுமாருக்கு, கைத்தறி துறையிலிருந்து, நேரடியாக, அவரது வீட்டிற்கே சான்றிதழ் அனுப்பப்படும்.தேசிய அளவில், சிறந்த நெசவாளர் விருதுக்கு நான் தேர்வானதை, சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக சிரமப்பட்டு, இந்த சேலையை நெய்தேன். விருதுக்கு தேர்வானது, மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் சங்கத்துக்கு நன்றி.ஆர்.கீதா, நெசவாளர், காஞ்சிபுரம்

தேசிய நற்சான்றிதழ் பெற, உறுதுணையாக இருந்த, கைத்தறி சேவை மைய அதிகாரி கார்த்திகேயனுக்கும், பிற அதி காரிகளுக்கும் நன்றி. தேசிய சான்றிதழ் பெறுவது, பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
- எம்.பி.செல்வகுமார், நெசவாளர்,


காஞ்சிபுரம் சிறப்பு என்ன?



விருது பெறும் கீதா நெய்த பட்டு சேலையின் சிறப்பம்சம்:

* சேலையின் இரு பக்கமும், கோர்வை ரகத்தில் நெய்யப் பட்டுள்ளது

* ஆறு நாடாக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன

* மயில், சக்கரம் போன்ற பாரம்பரிய வடிவங்கள், சேலையில் இடம் பெற்றுள்ளன

* இந்த சேலையின் மதிப்பு, 30 ஆயிரத்து, 800 ரூபாய்.

* தாழம்பூ படிவத்துடன் கூடிய டிசைன் சேலையை நெய்ய, ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்


கோர்வை ரகம் என்றால் என்ன?


பெரும்பாலான பட்டு சேலைகளில், ஒரே இழையிலேயே உடல் பகுதியிலும், கரை பகுதியிலும் நெசவு செய்யப்படும். ஆனால், கோர்வை ரக பட்டு சேலைகளில் மட்டும், கரை பகுதி, உடல் பகுதிக்கென, தனி பட்டு இழைகளை பயன்படுத்தியும், நான்கு நாடாக்களை பயன்படுத்தியும், நெய்யப்படும். அதிக வேலைப்பாடுகளுடன், கோர்வை ரக சேலை நெய்யப்படுவதால், காஞ்சிபுரத்தில், இந்த சேலை அரிதாகவே கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமக்கு செல்வம் திறமைக்கு மரியாதை செய்வோம்
Rate this:
Cancel
ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா
18-அக்-201919:09:09 IST Report Abuse
ilitchavaya tamilan@naanum hinduthaan Vaalthukkal sagotharar. Vaalthukkal sagothari
Rate this:
Cancel
18-அக்-201905:56:56 IST Report Abuse
அருணா வாழ்த்துக்கள் சகோதரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X