ask to Modi ji and Imran Khan says Ganguly | மோடி, இம்ரானிடம் கேளுங்கள்: கங்குலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மோடி, இம்ரானிடம் கேளுங்கள்: கங்குலி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)

கோல்கட்டா: ''இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடப்பது எங்கள் கையில் கிடையாது,'' என பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்தார்.






கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தொடர்களில் பங்கேற்பது இல்லை. 2012ல் மட்டும் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடியது. மற்றபடி இரு அணிகள் சர்வதேச தொடர்களில் மட்டும் மோதுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின் நிலைமை மோசமாக உள்ளது.





தற்போது இரு அணிகள் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவர் கங்குலி கூறியது: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தொடர்கள் எப்போது துவங்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த கேள்வியை பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் கேட்க வேண்டும். அப்படியே நடத்த முடிவு செய்தாலும், சர்வதேச தொடர்கள் அனைத்தும் மத்திய அரசின் வழியாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் இந்தக் கேள்விக்கு எங்களிடம் விடை இல்லை. இவ்வாறு கங்குலி கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X