பொது செய்தி

தமிழ்நாடு

இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று மழை கொட்டும்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று(அக்.,18) மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை மையம், இம்மாவட்டங்களுக்கு, ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, 16ல் துவங்கியுள்ளது. அதிகபட்சமாக நேற்று துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில், 14 செ.மீ., மழை பெய்தது. சென்னையில், விமான நிலையம்,
rain,Tamilnadu,TN,District,chennai,meteorological,centre,மழை,வானிலை,மையம்,சென்னை,மாவட்டங்கள்,Orange alert,ஆரஞ்சு, எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று(அக்.,18) மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை மையம், இம்மாவட்டங்களுக்கு, ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news



தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, 16ல் துவங்கியுள்ளது. அதிகபட்சமாக நேற்று துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில், 14 செ.மீ., மழை பெய்தது. சென்னையில், விமான நிலையம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில், 5 செ.மீ., பெய்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, 15 மாவட்டங்களில், மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இம்மாவட்டங்களுக்கு, ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலுார், துாத்துக்குடி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய, 15 மாவட்டங்களில், இன்று சில இடங்களில் மிக கன மழை பெய்யும். இவ்வாறு, அறிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
18-அக்-201909:27:43 IST Report Abuse
K.Sugavanam சேலத்தில் வெயில்..
Rate this:
GBR - ,
18-அக்-201910:47:40 IST Report Abuse
GBRpagalil malai peyadhu endru tamilnadu weather man sollitaar. Ivangalukku innum weather sariya ganikka therila......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X