பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை

Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஆடு, கோழி ,விற்பனை

திண்டுக்கல்: தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து, அய்யலுார் வாரச்சந்தையில் நேற்று, 1.5 கோடி ரூபாய்க்கு, ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலுாரில், வியாழன் தோறும் நடக்கும் வாரச்சந்தையில், காலை நேரத்தில் ஆடு, கோழி விற்பனை அதிகளவில் நடக்கிறது. அக்., 27ல் தீபாவளி பண்டிகை வருவதால், இறைச்சிக்கான தேவை அதிகம் இருக்கும்.இதனால் நேற்று, ஆயிரக்கணக்கில் ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்கு வந்தன. தற்போது, மழை பெய்து வருவதால், பிறந்து, மூன்று நாட்கள் முதல் சில வாரங்களான ஆட்டு குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமாவட்ட வியாபாரிகள் பலர் வந்திருந்தனர்.

வியாபாரி மோகன் கூறுகையில், ''தீபாவளி நெருங்கும்போது, இன்னும் விலை கூடும் என்பதால், நேற்றைய சந்தையில், ஆடுகளை வாங்குவதற்கு அதிக போட்டி இருந்தது. உயிருள்ள நாட்டு கோழிகள், கிலோ, 340 ரூபாய் என்ற அளவிலும், ஆடுகள் கிலோ, 450 முதல், 500 ரூபாய் வரையும் விற்கப்பட்டன. 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-அக்-201905:49:27 IST Report Abuse
 Muruga Vel இந்த நிலைமையில் பொருளாதார மந்தம் பற்றி பேசறாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X