பொது செய்தி

தமிழ்நாடு

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்!

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: 'தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப் படும்' என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.'சுற்றுச்சூழல் மாசு படுவதை தவிர்க்கும் வகையில், தீபாவளி நாளில், இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என, 2018ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று, 2018 தீபாவளி நாளில், தமிழகத்தில், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி; மாலை, 7:00 மணி
Firecrackers,Diwali,Allowed,2 hours,2 மணி நேரம்,மட்டுமே,பட்டாசு,வெடிக்கணும்

சென்னை: 'தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப் படும்' என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

'சுற்றுச்சூழல் மாசு படுவதை தவிர்க்கும் வகையில், தீபாவளி நாளில், இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என, 2018ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று, 2018 தீபாவளி நாளில், தமிழகத்தில், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி; மாலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க, அரசு அனுமதி அளித்தது.

இது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது; தடையை மீறி, பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து, மகிழ்ந்தனர். தடையை மீறி, பட்டாசு வெடித்ததாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகை, 27ம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்தாண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil newsஇதுகுறித்து, மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு போல இந்தாண்டும், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என, தீபாவளி நாளில், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க, அனுமதி வழங்கப்படும். அனுமதி மீறி பட்டாசு வெடிப்போர் மீது, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201915:08:44 IST Report Abuse
padma rajan தீபாவளி என்றாலே பட்டாசுக்கு தான் முக்கியத்துவம். எங்கள் காலத்தில் நாங்கள் ஒரு மாதம் முன்பே பட்டாசு வெடிக்க ஆரம்பிப்போம் எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது இரவில் இரண்டு மணிக்கு கூட வெடிப்போம். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் பட்டாசு வெடிப்பது அவ்வளவு ஆர்வம் அதுதான் தீபாவளி. அதிகாலை நான்கு மணிக்கு தலையில் என்னை வைத்துக்கொண்டு சரவெடி வைப்பது தொன்று தொட்டு வரும் வழக்கம். அதை மாற்றி ஆறு மணிக்கு தான் குடிக்க வேண்டும் என்றால் தீபாவளியின் முக்கியத்துவமே இல்லாமல் போய்விட்டது. வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகைக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் வைத்தால் பண்டிகை தலை இழந்துவிடும். தமிழர் பண்டிகைகளின் எல்லாவற்றையும்விட முக்கியமான பண்டிகை தீபாவளிதான். அதுவும் அதிகாலையிலேயே ஊரெல்லாம் வெடி சத்தம் கேட்பதுதான் மக்களுக்கு சுவாரஸ்யமான அனுபவம். இப்பொழுதெல்லாம் யாரும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளிப்பதில்லை எல்லாம் மாறிவிட்டன எனவே சட்டதிட்டங்களும் மாறிவிட்டன. தீபாவளியன்று ஐந்து மணிக்கு முன்னரே ஸ்நானம் செய்வது தான் மரபு. அதன் பிறகு புத்தாடை உடுத்தி இனிப்புகளை பகிர்ந்துகொள்வது ஆலயங்களுக்கு செல்வது பிறகு காலை 8 மணி ஒன்பது மணிவாக்கில் ஒரு சுவாரசியமான குட்டித் தூக்கம் போடுவது எல்லாம் ஒரு கடந்தகால அனுபவங்கள் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போதெல்லாம் சூரியன் வந்த பிறகு கூட தீபாவளியன்று நிதானமாக எழுந்து வருகிறார்கள் மக்கள்.
Rate this:
Cancel
18-அக்-201914:26:45 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் போன வருடம் good friday அன்று இரவு இரண்டுமணிவரை எங்கள் பக்கத்துக்கு தெருவில் உள்ள சர்ச் எதிரில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கு எதாவது கட்டுப்பாடு உண்டா ? போலி மதசார்பற்ற நாடு என்று சொல்லுவீர்களா ?
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-அக்-201917:25:54 IST Report Abuse
A.George Alphonseதம்பி அண்ணாமலை ஜெயராமன். என் கருத்தை படிப்பா....
Rate this:
Cancel
Ramanan -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201914:16:56 IST Report Abuse
Ramanan Diwali is a festival which is celebrated only once in a year. Vehicles with no proper pollution control norms run throughout the year.Government should stop the vehicles which adds to pollution rather than to control diwali.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X