ராம்கோ நூற்பாலை போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராம்கோ நூற்பாலை போனஸ் ரூ.8.12 கோடி உடன்பாடு

Added : அக் 18, 2019

ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ குரூப் நூற்பாலைகளில் 2018----19ம் நிதி ஆண்டிற்கான போனஸ் ரூ. 8.12 கோடி உடன்பாடு ஏற்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.போனஸ் பேச்சு வார்த்தை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, இயக்குனர் அபிநவ் ராமசுப்பிரமணியராஜா, தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ராம்குமார் ராஜா, விஷ்ணு சங்கர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது. இதன்படி ராம்கோ குழும நுாற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அலுவலர்களுக்கு ரூ. 8.12 கோடி அறிவித்து பட்டுவாடா செய்ய சேர்மன் பி.ஆர்.வெங்கட் ராமராஜா, உத்தரவிட்டார்.இதில் ராம்கோ நூற்பாலை பிரிவின் தலைமை அதிகாரி மோகன ரங்கன், தலைமை நிதி அதிகாரி ஞானகுருசாமி, அசோசியேட் வைஸ் பிரசிடென்ட் (மனிதவளம்) நாகராஜன், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் தலைமை பொது மேலாளர் சண்முகவேல், உதவி பொதுமேலாளர் (மனிதவளம்) கண்ணன் கலந்து கொண்டனர். மில்ஸ் தொழிற்சங்ம் சார்பில் எச்.எம்.எஸ் என்.கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி., விஜயன், ஐ.என்.டி.யு.சி., கண்ணன் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X