இன்பாக்ஸ்

Added : அக் 18, 2019
Advertisement

ரயில்வே ஸ்டேஷனை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள்ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் உரிய நேரத்தில் ரயில் ஏற முடியாமல் திணறுகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தால் அதிகாரிகள் 2 நாட்கள் ஆட்டோக்களை ஸ்டாண்ட்டுகளில் நின்று ஏற்ற வைக்கின்றனர். பின் மீண்டும் நுழைவுப்பகுதியிலே ஆக்கிரமிக்க அனுமதிக்கின்றனர். இது தொடர் வாடிக்கையாக உள்ளது. ரயில்வே போலீசாரும் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பதை ரயில்வே நிர்வாகம் தடை செய்ய வேண்டும்.-காளிராஜ், ஸ்ரீவில்லிபுத்துார்.முகம் சுளிக்க வைக்கும் பஸ் ஸ்டாண்ட்விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இலவச பொதுக்கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு சென்றாலே வராத நோய்களும் வந்து விடும். முன்பாவது நகராட்சி ஊழியர்கள் ரூ.2 வாங்கி கொண்டு கழிப்பறையை பராமரித்தும் வந்தனர். தற்போது இலவசம் என்பதால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பெரும்பாலான மக்கள் இலவச கழிப்பறையை பயன்படுத்த பயந்து திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமலெட்சுமி, விருதுநகர்.நாய்த்தொல்லை தாங்கலஸ்ரீவில்லிபுத்துார் 10வது வார்டு இடையபொட்டல் தெருவில் நாய்த் தொல்லை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றித்திரியும் சொறி நாய்களால் நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாய்களை பிடித்து செல்ல நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமர், ஸ்ரீவில்லிபுத்துார்.கிடப்பில் பணிகள்விருதுநகர் வி.வி.டி., அரங்கம் எதிரில் அருப்புக்கோட்டை பாலம் கீழ் மாதா பேக்கரி அருகே உள்ள வீடுகளில் வாறுகால் தோண்டப்பட்டு பணி பாதியிலே கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. வாறுகாலை முறையாக பராமரிக்கவும், பணியை விரைந்து முடிக்கவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வி, விருதுநகர்.

சேதமடைந்துள்ள தெப்பம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தெப்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே சேதமடைந்து விட்டது. ஆனால் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. தெப்பத்தை முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.-- ---- ஸ்ரீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்துார்



துார்வாரப்படாத வாறுகால்சிவகாசி பி.எஸ்.ஆர்., ரோட்டிலுள்ள வாறுகால் துார்வாரப்படவில்லை. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு ஒரே இடத்தில் தேங்கி துார்நாற்றத்தினை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டினையும் ஏற்படுத்துகிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீர் வாறுகாலை விட்டு வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. வாறுகாலை துார்வாரி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- ---- சந்திரன், சிவகாசி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X