பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த அழகி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (37)
Advertisement
nagaland,miss kohima,Focus on women, not cows,Miss Kohima,runner-up,message,PM,Modi,viral

கோஹிமா: 'பசுக்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட, பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என அழகி போட்டியில், இளம் பெண் கூறியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில், 'மிஸ் கோஹிமா' அழகி போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், இறுதிச் சுற்றுக்கு தேர்வான அழகிகளிடம், நடுவர் குழுவினர், பல்வேறு கேள்விகளை கேட்டனர். விக்குனுவ் சச்சு, 18, என்ற இளம் பெண்ணிடம், 'பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பதாக இருந்தால், என்ன கேட்பீர்கள்' என, கேட்டனர். அதற்கு அந்த பெண், 'பசுக்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட, பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என கேட்பேன்' என்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





நாட்டின் பல்வேறு பகுதிகளில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சிலர், மாட்டிறைச்சி சாப்பிடுவோர், விற்பனை செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தான், 'பசு பாதுகாப்பை விட, பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்' என, மறைமுகமாக, அந்த பெண் குறிப்பிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த பெண்ணுக்கு, அழகி போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
24-அக்-201917:41:37 IST Report Abuse
Nathan ஒப்பிக்குதே.
Rate this:
Share this comment
Cancel
Sankaran - chennai,இந்தியா
23-அக்-201920:22:16 IST Report Abuse
Sankaran ட்ரிபிள் தலாக் பெண் விடுதலை விஷயம் இல்லையா?.. என்னம்மா கொஞ்சம் கூட அறிவு இல்லையே...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-அக்-201918:09:10 IST Report Abuse
Natarajan Ramanathan மோடி 13 ஆண்டுகளில் தனக்கு வந்த பரிசு பொருட்கள் அனைத்தையும் ஏலம் விட்டு அந்த பணம் சுமார் 21கோடி முழுவதையும் பெண்கல்விக்காக கொடுத்தது கூட இந்த அழகிக்கு தெரியாதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X