Miss Kohima runner-up's message to PM Modi | பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த அழகி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த அழகி

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (37)
nagaland,miss kohima,Focus on women, not cows,Miss Kohima,runner-up,message,PM,Modi,viral

கோஹிமா: 'பசுக்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட, பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என அழகி போட்டியில், இளம் பெண் கூறியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில், 'மிஸ் கோஹிமா' அழகி போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், இறுதிச் சுற்றுக்கு தேர்வான அழகிகளிடம், நடுவர் குழுவினர், பல்வேறு கேள்விகளை கேட்டனர். விக்குனுவ் சச்சு, 18, என்ற இளம் பெண்ணிடம், 'பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பதாக இருந்தால், என்ன கேட்பீர்கள்' என, கேட்டனர். அதற்கு அந்த பெண், 'பசுக்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட, பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என கேட்பேன்' என்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





நாட்டின் பல்வேறு பகுதிகளில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சிலர், மாட்டிறைச்சி சாப்பிடுவோர், விற்பனை செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தான், 'பசு பாதுகாப்பை விட, பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்' என, மறைமுகமாக, அந்த பெண் குறிப்பிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த பெண்ணுக்கு, அழகி போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X