சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : அக் 18, 2019
Advertisement

குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: வளையங்குளம் 'கலாம்' காளி 22. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.

மாணவி தற்கொலை
மதுரை: பீ.பீ.குளம் முத்துராமலிங்கம் மகள் அர்ச்சனா 17. அப்பகுதி பெண்கள் கல்லுாரியில் படித்துவந்தார். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனஅழுத்தம் ஏற்பட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை வழக்கில் சரண்
வாடிப்பட்டி: மதுரை எஸ்.எஸ்.காலனி ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரஞ்சித்குமார் 44, அக்.,15 கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை சக்திவேலம்மாள் நகர் முத்துபாண்டி 30, வாடிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ரிமாண்ட் செய்து குற்றவியல் நடுவர் சிந்துமதி உத்தரவிட்டார். இக்கொலையில் ஈடுபட்டதாக பெரியசாமி 21, முஸ்தபா 21, பிரதீப் 21, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பாட்டிலால் குத்தியவர் கைது
காடுபட்டி : சோழவந்தான் கீழமட்டையான் கருப்பையா 34, மற்றும் தினேஷ் 31. இவர்களுக்குள் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு கோயில் திருவிழாவில் இவர்களுக்குள் தகராறு

ஏற்பட்டதில் கருப்பையா தம்பி ரமேஷை பீர் பாட்டிலால் குத்திய தினேஷை காடுபட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X