மும்பையில் ரூ.73 கோடிக்கு தண்ணீர் திருட்டு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Stealing,Water,73 Crores,Mumbai,மும்பை,தண்ணீர்,திருட்டு,ரூ.73 கோடி

மும்பை: மும்பையில், சட்டவிரோதமாக கிணறுகள் வெட்டி, அதிலிருந்து 73 கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீரை, 11 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்த ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்

மஹாராஷ்டிராவில், தெற்கு மும்பை பகுதியில், உள்ள கல்பாதேவி என்ற இடத்தை சேர்ந்தவர், திரிபுரபிரசாத் பாண்ட்யா. இவருக்கு சொந்தமான, பாண்ட்யா மேன்ஷன் என்ற கட்டடத்தில், பலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.


சட்டவிரோதம்:


இந்த கட்டடத்தில், சட்டவிரோதமாக இரண்டு கிணறுகளை, திரிபுரபிரசாத், 11 ஆண்டுகளுக்கு முன் வெட்டினார். அதிலிருந்து தண்ணீர் எடுத்து, குடிநீர் லாரிகளுக்கு விற்பனை செய்து வந்தார். இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் இரைப்பதற்கான மின் இணைப்பையும், சட்டவிரோதமாக பெற்று உள்ளார்.





இது குறித்து, பாண்ட்யா மேன்ஷனில் குடியிருக்கும், சுரேஷ் குமார் என்பவர், போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், 11 ஆண்டுகளாக, 73 கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீரை, திரிபுரபிரசாத் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, திரிபுரபிரசாத் பாண்ட்யா உட்பட ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
18-அக்-201912:28:05 IST Report Abuse
J.Isaac தண்ணீர் திருட்டு , மணல் திருட்டு, மக்கள் வரி திருட்டு , சுங்க வரி திருட்டு , வரி ஏய்ப்பு, லஞ்சம் , ஊழல் கொள்ளை , கொலை இந்தியா ஆன்மிக நாடு
Rate this:
Share this comment
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
18-அக்-201911:36:50 IST Report Abuse
B. இராமச்சந்திரன் சொந்த இடத்துல கிணறு வெட்டுறது குத்தமா.. இதை எப்ப கொண்டு வந்தீங்க..
Rate this:
Share this comment
Cancel
18-அக்-201907:11:28 IST Report Abuse
ஆப்பு உடாதீங்க...அத்தனை தண்ணீரையும் பறிமுதல் செய்யுங்க... வெளையாடுறாங்களா?
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-அக்-201910:00:38 IST Report Abuse
சுந்தரம் அதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. அந்த பாண்டியா ஏற்கனவே இந்த தண்ணியெல்லாம் பாகிஸ்தானுக்கு போயிக்கிட்டிருந்தது. அதை தோண்டி எடுத்து இந்தியாவுல உபயோகப்படுத்தி இருக்கேன்னு சொல்லிட்டாரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X