மும்பையில் ரூ.73 கோடிக்கு தண்ணீர் திருட்டு| Stealing Water Worth Over 73 Crores In Mumbai | Dinamalar

மும்பையில் ரூ.73 கோடிக்கு தண்ணீர் திருட்டு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (4)
Share
மும்பை: மும்பையில், சட்டவிரோதமாக கிணறுகள் வெட்டி, அதிலிருந்து 73 கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீரை, 11 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்த ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்மஹாராஷ்டிராவில், தெற்கு மும்பை பகுதியில், உள்ள கல்பாதேவி என்ற இடத்தை சேர்ந்தவர், திரிபுரபிரசாத் பாண்ட்யா. இவருக்கு சொந்தமான, பாண்ட்யா மேன்ஷன் என்ற கட்டடத்தில், பலர் வாடகைக்கு குடியிருந்து
Stealing,Water,73 Crores,Mumbai,மும்பை,தண்ணீர்,திருட்டு,ரூ.73 கோடி

மும்பை: மும்பையில், சட்டவிரோதமாக கிணறுகள் வெட்டி, அதிலிருந்து 73 கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீரை, 11 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்த ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்

மஹாராஷ்டிராவில், தெற்கு மும்பை பகுதியில், உள்ள கல்பாதேவி என்ற இடத்தை சேர்ந்தவர், திரிபுரபிரசாத் பாண்ட்யா. இவருக்கு சொந்தமான, பாண்ட்யா மேன்ஷன் என்ற கட்டடத்தில், பலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.


சட்டவிரோதம்:


இந்த கட்டடத்தில், சட்டவிரோதமாக இரண்டு கிணறுகளை, திரிபுரபிரசாத், 11 ஆண்டுகளுக்கு முன் வெட்டினார். அதிலிருந்து தண்ணீர் எடுத்து, குடிநீர் லாரிகளுக்கு விற்பனை செய்து வந்தார். இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் இரைப்பதற்கான மின் இணைப்பையும், சட்டவிரோதமாக பெற்று உள்ளார்.


latest tamil news



இது குறித்து, பாண்ட்யா மேன்ஷனில் குடியிருக்கும், சுரேஷ் குமார் என்பவர், போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், 11 ஆண்டுகளாக, 73 கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீரை, திரிபுரபிரசாத் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, திரிபுரபிரசாத் பாண்ட்யா உட்பட ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X