பொது செய்தி

இந்தியா

இந்திய விமானத்தை தடுத்த பாக்., போர் விமானங்கள்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (22)
Advertisement
SpiceJet,Flight,Intercepted,Pakistan,Air Force,பாகிஸ்தான்

புதுடில்லி: டில்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.


பாதுகாப்பு:


பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நம் விமானப் படை, இந்தாண்டு துவக்கத்தில் தாக்குதல் நடத்தி அழித்தது. அதைத் தொடர்ந்து, பாக்., போர் விமானங்கள் நம் எல்லைக்குள் நுழைய முயன்றன. அதை, நம் விமானப் படை முறியடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தன் வான் எல்லையை பயன்படுத்த, பாக்., தடை விதித்திருந்தது; பின், அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், டில்லியில் இருந்து, ஆப்கானிஸ்தானின் காபூலுக்குச் சென்ற, 'ஸ்பைஸ் ஜெட்' தனியார் விமான நிறுவனத்தின் பயணியர் விமானத்தை, பாக்., விமானப் படை நடுவானில் வழிமறித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, விமான போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதம், 23ல் டில்லி - காபூல் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை, தன் வான் எல்லையில், பாக்., விமானப் படை வழிமறித்து தடுத்து நிறுத்தியது; மேலும், உயரத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறியது. அந்த பயணியர் விமான விமானியுடன், பாக்., விமானப் படை வீரர்கள் பேசினர். அப்போது, 'இது பயணியர் விமானம்' என, ஸ்பைஸ் ஜெட் விமானி கூறினார். அதையடுத்து, தன் வான் எல்லை வரை, அந்த விமானத்துக்கு பாதுகாப்பாக, பாக்., விமானப் படை விமானங்கள் சென்றன.






எச்சரிக்கை:


ஒவ்வொரு விமான நிறுவனத்துக்கும், ஒரு குறியீடு உள்ளது. எஸ்.ஜி., ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் குறியீடு. விமானம் பறப்பது குறித்து தகவல் பரிமாறிக் கொள்ளும்போது, அதை, ஐ.ஏ., என தவறுதலாக, பாக்., விமானப் படை கட்டுப்பாடு அறை அதிகாரிகள் புரிந்து கொண்டுள்ளனர். அது, விமானப் படை விமானமாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டதால், பாக்., போர் விமானங்கள் வழிமறித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-அக்-201914:14:22 IST Report Abuse
Lion Drsekar விமானி ஓட்டிகள் இன்னாருடையது என்று கூறியிருந்தாலே பறக்கும்போதே இலவசமாக எரிபொருள் நிரப்பியிருப்பர்களே ? ஏனென்றால்.. வேண்டாம் வேண்டாம் ....உலகுக்கே தெரியும் இவர்களைப்பற்றிய அனைத்தும்..... நாம் வேறு எதற்கு மீண்டும் கிளறவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Guru - சென்னை,இந்தியா
18-அக்-201914:57:53 IST Report Abuse
Guruமாறன் சகோதரர்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகளை விற்று பல ஆண்டுகள் ஆகின்றன....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-அக்-201914:07:09 IST Report Abuse
Pasupathi Subbian விமானத்தின் மீது கோட்டை எழுத்தில் ஆங்கிலத்தில் ஸ்பைஸ் ஜெட் என்று எழுதியதை படிக்கத்தெரியாத மூடர்கள்.
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-அக்-201905:48:07 IST Report Abuse
 nicolethomsonஏதாவது மசாலா இருக்கும் என்று பாலைவன பாக்கிகளுக்கு சொல்லியிருப்பாங்க , அதான் நிறுத்தி பாக்கலாம்னு வந்திருக்காங்க...
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
18-அக்-201912:36:45 IST Report Abuse
HSR தலைப்ப மாற்றுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X