ஆவணமில்லா இந்தியர்கள் : திருப்பி அனுப்பியது மெக்சிகோ

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019
Share
Advertisement
indians, mexico,இந்தியர்கள், மெக்சிகோ, சட்ட விரோத குடியேற்றம்

மெக்சிகோ சிட்டி: உரிய ஆவணங்கள் இன்றி மெக்சிகோவில் தங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாடு திருப்பி அனுப்பியுள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக 'மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்களை தடுக்காவிட்டால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடும் வரி விதிக்கப்படும்' என டிரம்ப் எச்சரித்தார். இந்நிலையில், மெக்சிகோவில் உரிய ஆவணங்கள் இன்றிதங்கியிருந்த 311 இந்தியர்களை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
இது குறித்து, மெக்சிகோ குடியேற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்த 311 பேர் தனியார் விமானங்கள் மூலம் மெக்சிகோவுக்கு வந்தள்ளனர். சர்வதேச ஏஜென்ட்களுக்கு 20 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வழங்கி அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த அவர்களை போலீசார் பிடித்தனர். அவர்கள் அனைவருக்கும் அவசரகால சான்றிதழ் அளிக்கப்பட்டு மெக்சிகோவிலிருந்து தனி விமானம் மூலம் டில்லிக்கு 60 பாதுகாவலர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


மெக்சிகோவில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானம் டில்லியை இன்று வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்க திருப்பி அனுப்பப்பட்டு உள்ளவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X