பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கனமழை : சாலைகளில் வெள்ளம்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (9)
Advertisement

சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இன்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.







தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை அக்.,16ம் தேதி துவங்கியது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு விட்டு விட்டு கனமழை கொட்டியது. திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, கோயம்பேடு, தி.நகர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்கள் சாலைகள் வெள்ளத்தில் மிதந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் பல மணிநேரம் மழையில் நனைந்தபடி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2வது நாளாக இன்றும் (அக்.,18) சென்னையில் மழை பெய்து வருகிறது.





சென்னையில் சாலையில் தேங்கிய மழை நீர் மற்றும் வழியில் சரிந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகளுக்காக அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் மழைநீர் தேங்கியதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.




Advertisement



இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, 15 மாவட்டங்களில், மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
18-அக்-201917:10:49 IST Report Abuse
jagan கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அரசு அதிகாரிகள் துணையுடன் நீர் ஆதாரம் ஆக்கிரமிக்க பட்டுள்ளது. காரணம், இந்த அதிகாரிகள் எல்லாம் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள். இட ஒதுக்கீடு கேஸுங்களுக்கு காசே பிரதானம். அதுங்களுக்கு சொல் புத்தியும் கிடையாது சுய புத்தியும் கிடையாது. காசு குடுத்தால் எல்லா இடத்திலும் கையெழுத்து போட அதிகாரிகள் தயார். இப்போ இதுங்க தான் தண்ணீர் லாரி பிசினெஸ் செய்கிறார்கள், எனவே, வரி பணத்தில், வடிகால் என்று எல்லா நீரையும் கடலுக்கும் அனுப்புகிறார்கள்....இந்த நாடு உருப்படாது இந்த இட ஒதுக்கீடு கேஸுங்க இருக்கும் வரை ...
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
18-அக்-201915:46:49 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj நீரை வீணாக்கிவிட்டு சேமிக்காமல் பிறகு தூர்வார கோடிக்கணக்காக செலவழித்ததாக கணக்கு காட்டுவது நல்லதல்ல
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
18-அக்-201915:20:41 IST Report Abuse
rmr மழை நீர் சேமிப்பு ஒரு இடத்துலயும் உருப்படியா போடல அப்புறம் எதற்கு அதை போட்டு மக்கள் வரி பணத்தை ஏமாத்துகின்றனர் . இந்த திட்டதை செயல் படுத்திய அதிகாரி மற்றும் அனைவரையும் சும்மா விட கூடாது அவுனுங்களுக்கு வேலை இல்லாம செய்யணும் . வேண்டவே வேண்டாம் மக்களை ஏமாற்றும் அதிகாரிகள் .ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாக செல்ல கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X