பொது செய்தி

இந்தியா

மாவோயிஸ்ட் எண்ணிக்கை பாதியாக குறைவு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement

ஐதராபாத் : நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


ஜார்கண்ட், பீகார், ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதி, சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் சப்ளேவும் பாதியாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபமாக புதிதாக மாவோ., ஆள்சேர்ப்பு முகாம் ஏதும் நடத்தப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

2017 நிலவரப்படி, ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 6000 ஆக இருந்ததாகவும், தற்போது இது 3722 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களை ஈர்ப்பதற்காக மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக வெளியாகி வந்த நாளிதழ்களும் தற்போது குறைந்துள்ளது. மாவோயிஸ்டுகளால் தற்போது இளைஞர்களை குறிப்பாக படித்த இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியாமல் போனதும், எல்லை பாதுகாப்பு படையினரின் தீவிர கெடுபிடிகளுமே மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தில் இருந்து ஒரு லட்சமாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி மேற்குவங்களம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் மாவோயிஸ்டு இயக்க முக்கிய தலைவர்கள் பலர் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டதாலும், சிலர் சரணடைந்து விட்டதாலும் மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-அக்-201917:31:44 IST Report Abuse
J.V. Iyer கம்யூனிஸ்ட்கள் ஒழிந்தாலே மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தானாக குறையும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-அக்-201914:14:20 IST Report Abuse
Sanny இதெல்லாம் நம்பக்கூடாது, முற்றாக துடைத்து ஒழிக்கப்படணும். இப்படித்தான் 1986களில் இலங்கையில் 600 விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள், அவர்களிடம் இவ்வளவு ஆயுதம் தான் இருக்கு இந்தியப்படைகள் அவர்களை ஐந்தே நாளில் அடித்து நொறுக்கிவிடலாம் என்று RAW உளவு தகவல் சொன்னதால் தான் ராஜிவ் காந்தி அதுக்கு அனுமதிவழங்கினார், ஆனால் உண்மையில் அப்போது இருந்த விடுதலைப்புலிகள் சுமார் 12000 பேர், அவர்களிடம் இருந்ததது RAW சொன்னதைவிட 6 மடங்கு இருந்தது, ஆனால் இந்திய படை திரும்பிவர சுமார் நான்குவருடங்கள் சென்றது.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-201914:00:28 IST Report Abuse
Rajan எந்த பத்திரிக்கையை மூடினீங்க 🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X