அரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (66)
Advertisement

புதுடில்லி : அரசு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை, பிரதமர் மோடி தனியாருக்கு விற்று வருவதாகவும், இதனால் மிகப் பெரிய முரண்பாடு ஏற்பட்டு முதலாளித்துவம் அதிகரித்து வருவதாகவும் காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.


டுவிட்டரில் இந்தியில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல், நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை, சூட்- பூட் அணிந்த தனது நண்பர்களுக்கு மோடி விற்று வருகிறார். அதற்காக கடுமையாக அவர் உழைத்து வருகிறார். இது நிச்சயமற்ற சூழலை உருவாக்கி, லட்சக்கணக்கான பொதுத்துறை பணியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த கொள்ளையை தடுக்க எதிர்க்கட்சியாக தொழிலாளர்களுடன் நான் தோளோடு தோள் கொடுத்து நிற்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், பா.ஜ., அரசின் சாதனைகளை முன்னிறுத்தி மோடி, அமித்ஷா ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் மோடியையும், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் செயல்பாடுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து ராகுல் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு தேசிய அரசியலில் பரபரப்பாகி உள்ளது. அக்., 15 அன்று பிரசாரத்தின் போது பேசிய ராகுல், "தொழிலதிபர்களின் லவுட்ஸ்பீக்கராக மோடி செயல்படுகிறார். மக்களின் கவனத்தை திசைதிருப்பி யுக்தியை கையாண்டு மோடி பிக்பாக்கெட் அடிக்கிறார்" என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19-அக்-201907:48:52 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan நாட்டையே விற்ற காங்கிரஸ் இப்படி பேசலாமா?
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
18-அக்-201919:49:19 IST Report Abuse
natarajan s ஒரு அரசு என்பது Governance மட்டும்தான் செய்ய வேண்டும் . மற்றவற்றை superintendence தான் செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் Toomuch of Democracy (சிங்கப்பூர் பிரதமரின் கூற்று ) ஒரு அழிவுக்குத்தான் கொண்டு செல்கிறது. பொதுத்துறையில் ஒழுங்கினம் அதிகம். தொழில் சங்க நடவடிக்கை மூலம் அடிக்கடி உற்பத்திக்கு தடை, தவறு செய்யும் தொழிலாளி மீது நடவடிக்கைக்கு தடை என்று production man hours விரயமாக்க படுகிறது.உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் AIR INDIA என்ற ஒரு விமான நிறுவனத்திற்கு ( 250 Air Craft வைத்திருக்கும் நிறுவனம், United Airlines 1250 Air Craft வைத்துள்ளது , தனியார் நிறுவனம் )ஒரு கேபினட் அமைச்சர் . அந்த நிறுவனம் யாருக்கு விசுவாசமாக இருக்கும் ? அரசுத்துறை என்றாலே சோம்பேறித்தனம், வேலை பாதுகாப்பு என்ற நினைப்பில் யாரையும் மதிக்காமல் இருப்பது, நினைத்த நேரத்தில் வேலை நிறுத்தம் (முன்பெல்லாம் வங்கிகளில் Pen Down Strike மற்றும் Work to Rule என்றெல்லாம் செய்து வாடிக்கையாளர்களை சிரமப்படுத்தினார்கள் ) உற்பத்தி இருக்கிறதோ இல்லையோ , வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ வருடாவருடம் போனஸ் , குறிப்பிட்ட கால இடைவெளியில் 25 % ஊதிய உயர்வு மற்றும் லீவு , மெடிக்கல் பெனிபிட்ஸ் , rentfree quarters , LTC என்று எல்லா சலிகைகளையும் அனுபவித்துக்கொண்டு தனியார் கம்பனிகளுக்கு விசுவாசமாக இருப்பது ( BHEL , BSNL போன்றவற்றில் இது ரொம்ப சாதாரணம் . இங்கு ஓய்வு பெற்றவுடன் தனியார் நிறுவனத்தில் வேலை அல்லது BHEL நிறுவனத்திற்கு supplier ). தனியார் தொலைத்தொடர்பு நிறுவனக்கு DOT போட்ட வழித்தடங்களில் முதன்முதலாக access கொடுத்தது முரசொலி மாறன் தான். மேலும் 2 G வந்தபோது, அதை முதலில் BSNL மற்றும் MTNL ளுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும், ஒரு அரசு துறை எப்படி தனியாருடன் ஏலத்தில் பங்கு பெற முடியும், யார் ஏல தொகையை முடிவு செய்வது (எல்லாவற்றிலும் L 1 என்று இருக்கும் போது) இதுவரை எந்த கோர்ட்டும் ஏன் சம்பந்த பட்ட அமைச்சர் BSNL நிறுவனத்திற்கு 2 G Spectrum முன்னுரிமையை ஒதுக்கவில்லை என்று கேள்வி கேட்கவில்லை ? (First come first serve என்று பாலிசி மாற்றப்பட்டது என்று ஒரு விளக்கம் ) இப்படியெல்லாம் துரோகம் செய்து BSNL நாசமாகபோக காரணமாக இருந்தது இந்த காங்கிரஸ் கூட்டணியினர்தானே? மொத்தம் லஞ்சமாக வசூலான 10000 கோடி (122 தனியாருக்கு10 % commission 2 G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய வாங்கப்பட்ட தொகை அரசியல் தலைகள் அனைவர்க்கும் பகிர்தளிக்கப்பட்டது ) . BSNL மூடப்படும் சூழ்நிலையை உருவாக்கியதே ராசா மற்றும் மாறன் சகோதரர்கள்தான் (Road map போட்டது மாறன் , நடைமுறை படுத்தியது ராசா , அதெற்குதான் நமது கட்டுமரம் டெல்லியில் முகாமிட்டு இந்த துறைதான் வேண்டும் என்று போராடி ராசாவுக்கு வாங்கிக்கொடுத்து ஆதாயம் பார்த்தார் ) இந்த வெள்ளை யானைகளை பராமரிக்க ஆகும் செலவே அதிகம் . Obsolete Technology upgradation kidaiyathu , ஊழியர்களும் upgrade செய்து கொளவ்து இல்லை, பின் எப்படி தனியாருடன் போட்டி போட முடியும் (TANSI ஒரு உதாரணம் ) முதலில் இந்த தொழிற்ச் சங்ககங்களை regulate செய்தால்தான் இவற்றை மீண்டும் புனரமைக்க முடியும் இல்லையென்றால் இந்தியாவில் உள்ள அணைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மூடப்படும் HMT , HEC , IDPL , HPF வரிசையில் அடுத்து HAL . இதுதான் நிதர்சனம் .
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
18-அக்-201918:05:31 IST Report Abuse
madhavan rajan இப்போ கூவுற ராகுலு எதுக்காக பாராளுமன்ற தேர்தல்லே தோளோடு தோள் நின்று போராடவில்லை? அப்படி போராடியும் பப்பு வேகவில்லை என்றால் எப்போது மீண்டும் ஏன் கூவுகிறார். மாநில கட்சிகள் காங்கிரசை தங்கள் கட்சிக்கு அடிமையாகத்தான் நடத்துகின்றன. ஆனால் நீங்கள் அவர்கள் தோள்மீது ஏறி நின்று கொள்ள விரும்புவதைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். அதற்கு சம்மதம் என்றால் நீங்கள் தோளோடு தோள் கொடுப்பதில் அவர்களுக்கு ஆட்சேபணையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X