அசாம் என்ஆர்சி தலைவர் திடீர் மாற்றம்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : அசாம் மாநில தேசிய குடியுரிமை பதிவுத்துறை (என்ஆர்சி)யின் தலைவர் பிரதீக் ஹஜீலாவை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.



latest tamil news


48 வயதாகும் ஹஜீலாவை அசாம் மாநிலத்தின் என்ஆர்சி., தலைவராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இவர் தலைமையில் 50,000 க்கும் அதிகமான பணியாளர்கள், குடியுரிமை பதிவு பட்டியலை சரிபார்த்தனர்.
இதில் உண்மையில் இந்திய குடிமக்களாக இருந்த லட்சக் கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இவர்களில் இந்துக்கள் பலரும் அடங்குவர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹஜீலா மீதும் பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.


latest tamil news


இந்நிலையில் வேண்டுமென்றே என்ஆர்சி பட்டியலில் இருந்து உண்மையான இந்தியர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று (அக்.,18) விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ஹஜீலாவை பணிமாற்றம் செய்ய உத்தரவிட்டது. இந்த பணிமாற்ற உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உடனடி, அவசர பணிமாற்றத்திற்கு ஏதாவது காரணம் உண்டா என அரசு தரப்பு வழக்கறிஞரும், அட்டர்னி ஜெனரலும் ஆன வேணுகோபால் நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, காரணம் இல்லாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படுவதில்லை என்றார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகலில், என்ன காரணத்திற்காக ஹஜீலா அவசரமாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் என எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
18-அக்-201915:15:49 IST Report Abuse
hasan குழப்பம் ,
Rate this:
Cancel
18-அக்-201913:14:56 IST Report Abuse
ஆப்பு இவரோட வேலை அங்கே முடிஞ்சாச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X