
'அசுரன்' படத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை குறிப்பிட்ட ஜாதியினர் கைப்பற்றும் விதமாக கதைக் களமும் காட்சி அமைப்பும் உள்ளது. இந்தப் படத்தை நேற்று முன்தினம் ஸ்டாலின் பார்த்தார். பின் கதாநாயகனாக நடித்த தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரது டுவிட்டர் பக்கத்திலும் பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று 'டுவிட்டர்' பக்கத்தில் :" பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல; பாடம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். ஆஹா... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று 'முரசொலி' நாளிதழ் அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்" .இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

அரசியலை விட்டு விலகத் தயார்
இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அவரது டுவிட்டரில்; " மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? இவ்வாறு ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை! pic.twitter.com/6x3S6P6qkL
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE