ஐஎன்எஸ் மீடியா வழக்கு: சிதம்பரம், கார்த்தி மீது குற்றப்பத்திரிகை

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.






ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிதம்பரம், ஜாமின் கேட்டு அடுத்தடுத்து பலமுறை மனுத்தாக்கல் செய்து வந்தார்.
இதற்கிடையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சித்து வந்தது. இந்நிலையில் அக்., 16 அன்று அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற டில்லி கோர்ட், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. தற்போது சிதம்பரம், திகார் சிறையில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.




இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, இன்று (அக்.,18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகையை பெரிய இரும்பு பெட்டியில் எடுத்து வந்து தாக்கல் செய்தது. இந்த பட்டியலில் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் சிதம்பரத்தின் காவல் அக்.,24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.... - ,
18-அக்-201919:40:48 IST Report Abuse
.... பெட்டி பெட்டி யா கொள்ளை அடிச்சா... குற்ற பத்திரிக்கை யும் பெட்டி ல வருது... ஆனாலும் இந்த பெட்டி சிறுசு தான்...
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-அக்-201919:03:37 IST Report Abuse
Rajagopal நெறியாப் பேருக்கு இப்ப குளிர் சுரம் புடிச்சுக்கிச்சாம்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-அக்-201917:28:16 IST Report Abuse
J.V. Iyer ப.சி.யையும், கார்த்தியையும் உள்ளே வைத்தால், பொருளாதாரம் முன்னேற்றமடையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X