உ.பி.,யில் பட்டப்பகலில் ஹிந்து சமாஜ் தலைவர் கொலை

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பட்டப்பகலில், ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., தலைநகர் லக்னோவை சேர்ந்தவர் கமலேஷ் திவாரி. ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்த திவாரி, 2017 ல், ஹிந்து சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார்.



latest tamil news


உத்தரபிரதேசம் லக்னோவில் இந்துமகா சபை தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி. குர்ஷிதாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் திடிரென நுழைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் திவாரியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியது.



இந்நிலையில், திவாரி, லக்னோவில் உள்ள தன் அலுவலகத்தில் இன்று(அக்.,18) காலைஇருந்தார். அப்போது, காவி உடை அணிந்த சிலர் வந்தனர். 'திவாரிக்கு, தீபாவளி பரிசு கொடுக்க வந்துள்ளோம்' என, அலுவலக காவலரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை உள்ளே செல்ல, காவலர் அனுமதித்தார். உள்ளே சென்ற அவர்கள், திவாரியை சந்தித்து துப்பாக்கியை எடுத்து சராமரியாக சுட்டனர். குண்டுகள் பாய்ந்ததில், திவாரி ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அடுத்த நிமிடம், கொலையாளிகள் தப்பியோடினர்.


latest tamil news


சத்தம் கேட்டு காவலரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த திவாரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டப்பகலில், திவாரி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news


இதுபற்றி போலீசார் கூறியதாவது: திவாரி சுட பயன்படுத்திய துப்பாக்கியை கொலையாளிகள் விட்டு சென்றுள்ளனர். அதை கைப்பற்ற உள்ளோம். அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் முகங்கள் பதிவாகியுள்ளன. திவாரியுடன், கொலையாளிகள் போனில் பேசியுள்ளது தெரியவந்துள்ளது, விரைவில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம். இவ்வாறு போலீசார் கூறினார்.

உபி., மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டும், பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளை சேர்ந்த, நான்கு பேர் படுகொலையெ்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-அக்-201920:57:04 IST Report Abuse
Rafi உற்ற நண்பர்களாக இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டால், எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். அதே நேரத்தில் ரவுடிகள் இருவர் பிரிந்துவிட்டால், நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்ற போராட்டத்தில் அவர்களுக்கு தெரிந்த வழிமுறையை பின்பற்றி மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொண்டிருப்பது இயல்பே.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-அக்-201911:20:00 IST Report Abuse
Malick Raja இவர் முன்னாள் இந்து மகா சபா தலைவர் . இப்போது அதிலிருந்து விலகி இந்து மகா சமாஜ் என்ற கட்சியின் தலைவர் என்பதுமுதல் தகவல் உண்மை .. மனித இனங்களில் வேற்றுமை இருப்பதில் ஒற்றுமை வேற்றுமையை களையும் அதுவே மனித மாண்பு. அதை அறியாதவர்களே இதுபோன்ற வனவிலங்குகளை போன்ற நடவடிக்கைகளில் பணிபுரிகின்றனர் என்பது தெளிவு .. ஏவியவர்கள் வெளியே அம்புகள் உள்ளே போவதும் இயல்பாகி பின்னர் அம்புகளும் வெளியில் வரும் .. ஆக எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொறம் மெய்ப்பொருள் காண்பதறிவு
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
18-அக்-201918:26:56 IST Report Abuse
தஞ்சை மன்னர் கோவில் கட்டுவாங்களா இவருக்கு
Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
18-அக்-201919:32:10 IST Report Abuse
தஞ்சை மன்னர் முழுசா போடு...
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
18-அக்-201920:19:02 IST Report Abuse
Nallavan Nallavanமோதிக்குக் கோவில் கட்டிய பெண்களைத்தான் கேட்கவேண்டும் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X