கல்கி ஆசிரமத்தில் ரூ.44 கோடி பறிமுதல்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி சாமியார் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், நடத்திய சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள, வரதய்ய பாளையத்தில், கல்கி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன்
கல்கி, ஆசிரமம், சோதனை, வருமான வரித்துறை, ரெய்டு, Income tax, raid, Kalki,

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி சாமியார் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், நடத்திய சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil news


ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள, வரதய்ய பாளையத்தில், கல்கி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள், தமிழகம், ஆந்திராவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ளன. கல்கி சாமியாரை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்த கட்டணத்திற்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை என, கல்கி ஆசிரமத்தின் மீது, வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. அதையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி ஆசிரமம் மற்றும் சாமியாரின் மகன், என்.கே.வி.கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், கடந்த 16ம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.


latest tamil news


சென்னையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம், நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரமம் உட்பட, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 40 குழுக்களாக, 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.


latest tamil news



இந்த சோதனையில் ரூ.43.9 கோடி ரொக்கம் மற்றும் ரூ.18 கோடி மதிப்பு அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்கம், ரூ.5 கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
24-அக்-201918:27:36 IST Report Abuse
Sampathkumar Sampath இவரு கல்கி சாமியார் அல்ல ..... கஜ கலக்கி சாமியார்.
Rate this:
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
19-அக்-201903:18:57 IST Report Abuse
Vetri Vel கமிஷன் பொய் சேரவில்லை போல..... அந்த பகவானுக்கே வெளிச்சம்...
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
19-அக்-201901:15:39 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் இந்துக்கள் கஷ்டப்பட்டு ரத்தத்தை வியர்வையாக ஆக்கி உண்டாக்கிய பணம், அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X