சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கேரள போலீசார் சோதனை

Added : அக் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: கேரளாவில் கொச்சி அருகே, மரடு பஞ்சாயத்து பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடிகளையும், நெநட்டூர் பகுதியில், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பையும் இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
விதிகளை மீறிய நிறுவனங்கள், அதற்கு அனுமதி அளித்த கேரள அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், கேரள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 அரசு அதிகாரிகளை கைது செய்தனர்.

நெட்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனம் மீதும் கேரள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அந்த கட்டுமான நிறுவனத்திலும் கேரள தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
19-அக்-201901:06:50 IST Report Abuse
TAMILAN தமிழ் நாட்டில் இருந்து கொண்டு கொள்ளை அடிக்கும் மற்றும் எண்ணற்ற மார்வாடிகள் விதியை மீறித்தான் தமிழகத்தில் தொழில் நடத்தி தமிழர்களை கூலிகளாக மாற்றியுள்ளனர். அவர்கள் மீது என்றுமே நடவடிக்கை எடுத்ததில்லை. என்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X