நடவடிக்கை எடுக்கிறாயா இல்லையா?: பாக்.,கிற்கு இறுதிக்கெடு

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (19)
Advertisement
pakistan, Fatf,  terror, பாகிஸ்தான், எப்ஏடிஎப்,

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள், பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 'கறுப்பு பட்டியலில்' வைக்கப்படும் என, எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
பண மோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்த்து, 1989ம் ஆண்டில் நிறுவப்பட்டது, எப்,.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு. ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமை இடமாக வைத்து செயல்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், கடந்த ஆண்டில், பாகிஸ்தானை, 'கிரே' பட்டியலில், எப்.ஏ.டி.எப்., சேர்த்தது. 'பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கைகளை, 2019 அக்டோபருக்குள் நிறுத்த வேண்டும்; இல்லாவிடில், ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெறும்' என, எப்.ஏ.டி.எப்., எச்சரித்திருந்தது.

Financial Action Task Force என்பது ஒரு சர்வதேச அமைப்பு. பாரிஸ் நகரில் செயல்படுகிறது. பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுப்பதுதான் இதன் பணி. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கி பயங்கரவாதத்தை வளர்த்து வருவதாக பாகிஸ்தான் மீது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம்சாட்டின. அதனடிப்படையில் 2018ல் பாகிஸ்தானை க்ரே லிஸ்ட்டில் Grey List வைத்தது, FATF அமைப்பு.




பாரீசில், எப்.ஏ.டி.எப்., அமைப்பின், மூன்று நாள் கூட்டம், நடந்தது. சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, ஹபீஸ் சயீத், தன் கணக்குகளில் இருந்து நிதியை எடுக்க, பாகிஸ்தான் அனுமதித்ததை மேற்கோள்காட்டி, பாகிஸ்தானை, கறுப்புபட்டியலில் சேர்க்க, இந்தியா வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பிப்.,2020க்குள் தனது முழு செயல்திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். முழுமையான திட்டத்தின் மூலம் பாகிஸ்தானால், அதன் செயல் திட்டத்தில் முழு அளவிலும் குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றம் செய்யப்படாவிட்டால், கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுக்கும். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க தவறினால், பாகிஸ்தானுடனான வணிக உறவுகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு தங்கள்நிதி நிறுவனங்களுக்கு உறுப்பு நாடுகள் ஆலோசனை வழங்க வேண்டும். எப்ஏடிஎப் அமைப்பு தெரிவித்த 27 நடவடிக்கைகளில் 5 மட்டுமே பாகிஸ்தான் எடுத்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எப்ஏடிஎப் தலைவர் ஷியான்மின் லியூ கூறுகையில், பாகிஸ்தான் வேகமாக அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020 பிப்.,க்குள் நடவடிக்கை எடுக்க தவறினால், 'கறுப்பு பட்டியலில்' சேர்க்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-அக்-201917:37:39 IST Report Abuse
Malick Raja பலரும் உணர்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
19-அக்-201907:16:31 IST Report Abuse
Raj இவர்களுக்கு கால கெடு எதுக்கு ? சும்மா அடிக்கற மாதிரி அடிக்கிறோம், வலிக்கிற மாதிரி நடி என்று நாடகமா ? எப்படியும் சீனாவும், சவூதி போன்ற நாடுகளும் பணத்தை வாரி இறைப்பார்கள்..கேட்பாரில்லை. இதெல்லாம் சும்மா. நாட்டுக்குள்ளே UN படைகளை விட்டு அடித்து நொறுக்கினால் நம்பலாம், தீவிரவாதம் கட்டுப்படலாமென்று.
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-அக்-201921:41:16 IST Report Abuse
elakkumanan காவி தீவிரவாதம் சர்வதேச எல்லைகளை கடந்து பறந்து விரிகிறது என்பதற்ககு இதைவிட ஒரு நல்ல சாட்சி உள்ளபடியே கிடைப்பதற்கரிது. சிறுபான்மையினத்தின் உரிமைகள் நசுக்கப்படுகிறது. அய்யகோ, இதை கேட்பார் யாரும் இந்த பாரில் இல்லையோ? மோடி ஒரு மோசமாமான மனிதர் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்? இதை காண விருப்பமில்லாமல்தானோ என்னவோ, எமது காயிதேமில்லதும் (கண்ணியமிக்க ), ஜின்னாவும் பிறை கொடியை என்னுடைய கையிலே கொடுத்துவிட்டு, ஏன் கையை பிடித்து கதறியது இன்றும் ஏன் மனக்கண்ணில் விரிகிறது. இப்படிக்கு, சிறுபான்மை காவல் பணியில், இன்றும் என்றும் தொண்டனாக ......மு க .
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
23-அக்-201917:21:09 IST Report Abuse
THENNAVANஓசி சவப்பெட்டி & ஓசி புதைகுழி வாழ்க ஜனநாயகம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X