சீனாவின் கையாள்: டிக்டாக் மீது பாயுது பேஸ்புக்

Updated : அக் 18, 2019 | Added : அக் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

நியூயார்க்: சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் விமர்சித்துள்ளார்.

சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் பிரபலமடைந்து வருகிறது.
இதில் சிலர் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் கலாசாரத்தை கேள்விகுறியாக்கும் வகையிலும், ஆபாசமாகவும் வீடியோ பதிவிட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர். அதே நேரத்தில் அரசியல், பொதுமக்கள் போராட்டங்கள், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் என அனைத்தையும் டிக்டாக் செயலி, சென்சார் செய்துவிடுவதால் அவ்வாறான பதிவுகளை வெளியிட முடிவதில்லை எனக் கூறப்படுகிறது.
உதாரணமாக ஹாங்காங் போராட்டம் குறித்து ஒரு சிறு வரி கூட டிக்டாக் செயலியில் இருக்காது என சில போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், பலரும் டிக்டாக் செயலியை எதிர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனரான மார்க் ஜக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்க் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற எங்கள் சேவைகளில் வலுவான தனியுரிமை பாதுகாப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக எல்லா இடங்களிலும் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பயன்படுத்துகின்றனர்.
உலகெங்கும் விரைவாக வளர்ந்து வரும் டிக்டாக் செயலி மீது அமெரிக்காவிலும் எதிர்ப்பு உள்ளன. இவ்வாறான செயலிக்கு அமெரிக்காவிலும் சென்சார் செய்யப்படுவதால் மக்களின் போராட்டங்கள் வெளியாவதில் சிக்கல் உள்ளது. டிக்டாக் செய்யும் வேலைகளை எல்லாம் மக்கள் புரிந்து உணர வேண்டும். சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது. இது போன்ற சேவை நமக்கு தேவையா. இவ்வாறு மார்க் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sweetline -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-201918:43:36 IST Report Abuse
sweetline First, Facebook should ban those unwanted memes which diverts nd spoils youth , ban nudity nd violence... seeing more unwanted things nowadays. the world s going in a different direction. making food challenges, publishing nude videos nd spoiling youngsters mind in everything... mark has no qualities to say this on Twitter...
Rate this:
Share this comment
Cancel
Thamilanban - Shivamogga,இந்தியா
18-அக்-201917:56:40 IST Report Abuse
Thamilanban முதல்ல FACE BOOK ஐ தான் தடை செய்யவேண்டும். போராட்டம் என்ற பெயரில் என்ன அக்கப்போர் செய்கின்றனர் என்பதை தமிழகத்தில் வந்து பார்த்தால்தான் தெரியும். டிக் டாக் செய்வது சரிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X